மிளகாயையும் எந்தெந்த பருவத்தில் என்னென்ன பயிரிடலாம்?

பீடி ரக பருத்தியில் எப்படி அதிக விளைச்சல் பெற முடிகிறது?

பருத்தியில் காய் புழுவின் தாக்கத்தினை இளம் பருவத்தில் இருந்தே தவிர்ப்பதால் பயிர் நன்கு வளர்ந்து ரகங்களில் விட விட 30 நாள் முன்னதாகவே அறுவடைக்கு வரும் மேலும் தரமான பஞ்சுகளுடன் 15% அதிக மகசூல் கொடுக்கிறது.

மிளகாயையும் எந்தெந்த பருவத்தில் என்னென்ன பயிரிடலாம்?

ஆடி மாதத்தில் (ஜூன் ஜூலை கோ 1கோ 2 கோ 3 பி கே எம் 1 மற்றும் தை மாதத்தில்( ஜனவரி பிப்ரவரிகோ 1 கோ 2 பி எல் ஆர் 1 ஜீ 5 மற்றும் (ஆவணி செப்டம்பர் பூசாஜ்வாளா சாத்தூர் சம்பா , அர்கபசந்த் ராமநாதபுரம் குண்டு நம்பியூர் குண்டு ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

தென்னைக்கு எப்பொழுது உரம் இடுவது ?

தென்னைக்கு மண்ணில் ஈரப்பதம் போதுமானதாக உள்ளநிலையில் உரம் இடலாம்.

மேலும் நீர் பாசனம் வசதி கொண்ட நிலங்களில் உரத்தை மூன்று அல்லது நான்கு முறை சமபங்கு பி ரித்து ஏப்ரல் மே ஆகஸ்ட் செப்டம்பர் டிசம்பர் மற்றும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் இடலாம்

திருந்திய நெல் சாகுபடி முறையில் நிலத்தை எவ்வாறு தயார் செய்வது?

நடவு நிலம் தயாரிப்பதற்கு கோடைகாலத்தில் நிலத்தை நன்கு உழுது நீர் தேவையை சிக்கனப்படுத்த வேண்டும்.

நிலவுவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும் நிலத்தின் மேற்பரப்பு வரை தண்ணீர் நிரம்பி இருக்க வேண்டும்.

சேற்று உழவு செய்யப்படும் பொழுது 2.5 சென்டிமீட்டர் ஆழம்வரை நிலத்தில் நீர் இருக்க வேண்டும்.

செம்மை நெல் சாகுபடியில் நிலத்தை சமப்படுத்துதல் முக்கியமானது. வயல் வெளிகளும் முக்கியமானதாகும்.
கன்று ஈன்ற பிறகு மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தினால் கருவூட்டல் செய்யலாம்?

கன்று ஈன்ற பிறகு மாடுகளுக்கு போதுமான தீவனமும் கணிப்பும் இருந்தால் கன்று ஈன்ற 16-ம் நாளில் ஒரு சில மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

இந்த நிலையில் மாடுகளை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்த கூடாது. கன்று ஈன்ற 60 நாட்கள் கழித்து வரும் சினைப்பருவத்தில் மாடுகளுக்கு கருவூட்டல் செய்ய வேண்டும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories