தமிழகத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை தென் மேற்கு பருவமழை காலம் ஆகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவப் மழைக்காலம் ஆகும்.
வடகிழக்கு பருவமழை எப்போது?
நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படியே வங்கக்கடலில் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபர் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் கூறியுள்ளார்.
நெல் விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
நெற்பயிர் மழை நீரினால் மூழுகுவதை தடுத்திட தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வயல்களில் தண்ணீரை வடித்திட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும்.
இள ம் பயிருக்கு அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் துத்தநாகச் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு மஞ்சள் அல்லது இளம் மஞ்சளாக மாறி பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும் பட்சத்திலும் தண்ணீரை வெடித்தவுடன் பஞ்சகாவ்யா கரைசல் மேம் படுத்தப்பட்டு அமிர்தகரைசல் இதனுடன் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகியவை கலந்துவிட்டு பயிரின் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.
வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்ப எண்ணெய் போன்றவற்றை மண்ணிற்கும் பயிர்களுக்கும் அளிப்பதால் வேர்களின் தழைச்சத்து வீணாவதை தடுப்பதோடு பூச்சி தாக்குதல் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
நெல் பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டு புழு, பச்சை தத்துப்பூச்சி, குலை நோய், இலைக்கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கண்டறிந்து தக்க பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழகிய நிலை ஏற்பட்டு இருப்பின் இருப்பில் உள்ள நாற்றுகளை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவுப் பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும்.
இதுதவிர இயற்கை இடர்பாடுகலினால் பயிர் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திட வேண்டும்.