வெயில் சுட்டெரித்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளால் தர்பூசணி விற்பனை குறைவு!

கோடை வெயிலில் மக்களின் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவும் தர்பூசணிகளை (Watermelon) உற்பத்தி செய்யும் விவசாயிகள் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. நிழலில் நின்று 10 ரூபாய்க்கு நாட்டுத் தண்ணீர் பழம் வாங்கித் தின்னும்போது, எத்தனை செல்சியஸ் டிகிரி வெயில் அடித்தாலும் அதை உணர முடியாது. உண்மையில் இந்த பழங்களை விவசாயிகள் கண்ணீரைச் சிந்தி வளர்க்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

விவசாயிகள் கவலை
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இப்பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயப் பணி பிரதானத் தொழிலாக உள்ளது. இந்தநிலையில் கோடைக் காலத்தையொட்டி வேடபட்டி, பூலுவம்பட்டி, இருட்டு பள்ளம், சேம்மேடு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி (Watermelon Cultivation) செய்துள்ளனர். ஆனால் கொரோனா (Corona) நோய்த்தொற்று பரவுதல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்றார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories