பழங்களின் தேவதை என அழைக்கப்படும் பப்பாளி எல்லாப் பருவங்களிலும் கிடைக்கும்.
மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகை இரண்டிற்குமே பப்பாளியின் பங்கு அதிகமாக இருக்கும். பலவகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது.
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் சர்க்கரை மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண்பார்வை சிறப்பாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அடிக்கடி பப்பாளி சாப்பிடுபவர்களை எந்த நோயும் அண்டாது. தொடர்ச்சியாக பப்பாளிப் பழத்தை சாப்பிடுவது கல்லீரல் வீக்கம் குறையும் .மேலும் பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுவது குறையும் .நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும் முகம் அழகு பெறும். பப்பாளிக் காயை சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும் பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி விஷம் இறங்கும் .மேலும் பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண் புண்கள் மேல் பூச புண்கள் விரைவில் குணமாகும்.
குறிப்புகள்
ரெட்லேடி பப்பாளி ரகத்தின் வயது 22 மாதங்கள் ஆகும். இந்த ரகம் நடவுக்கு ஆடி ஆவணி மாதங்கள் ஏற்றதாகும் .இந்த ரகம் நல்ல சிவப்பு மஞ்சள் நிறத்தில் ,அதிக சுவை கொண்டதாகவும் காணப்படும்.