இரண்டு மாதத்தில் 20 ஆயிரம் ரூபாய் தரும் மஞ்சள் ரக தர்பூசணி..

விவசாயத்திற்கு தேவையான மழை இல்லை, கூலிக்கும் ஆட்கள் வருவதில்லை. விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்களால் விவசாயிகள் பலர், இன்று விவசாயத்தையே கைவிட்டு வருகின்றனர்.

ஆனால் “எதையும் சரியாக செய்தால், லாபம் ஈட்ட முடியும்‘ என்ற, தன்னம்பிக்கையுடன் தர்பூசணி விவசாயத்தில் நீங்களும் கொடிகட்டி பறக்கலாம். விவசாயத்தில் போதிய விலை இன்றி, விவசாயத்தை விடும் நிலையில் இருந்து

விவசாயத்தில் நவீன தொழில் நுட்பம், அரசு மானிய திட்டங்களை அறிந்து, தர்பூசணி விவசாயத்தில் இறங்கலாம்.

இயற்கை உரங்களையே பயன்படுத்தி அதன் பயனாக, ஏக்கருக்கு மூன்று டன் விளைச்சல் பெறலாம்.

நிலத்தில் சொட்டு நீர் பாசன முறையை, அரசு மானியத்துடன் அமைத்து, இயற்கை உரங்களாக மாட்டு சாணம், கோமியமும் தான் இதற்கு பிரதானம்.

நிலத்தில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சாணத்தை பரப்பி, சட்டி கலப்பை மூலம் உழவு செய்து, நிலத்தை ஆறப்போட வேண்டும்.

தர்பூசணி மஞ்சள் ரகத்தில், இனிப்பு தன்மை அதிகம் இருப்பதால், விலையும் கிடைக்கும்.

சொட்டு நீர் குழாய் வழியாக மாட்டு கோமியத்தை கலக்கலாம். சொட்டு நீர் பாசனத்திற்கு பணியாளர்கள் தேவையில்லை.

60 நாட்களில் ஒரு செடியில் நல்ல எடை, நடுத்தரம், சிறிய காய் என, மூன்று வகை காய்கள் காய்க்கும். மாசி, பங்குனி, சித்திரையில் அறுவடை செய்ய வசதியாக, பயரிடலாம்.

அதிகபட்சமாக, ஒரு காய் 4 கிலோ எடையில் கிடைக்கும். எட்டு ஏக்கரில் பயிர் செய்ததில், 24 டன் வரை விளைச்சல் கிடைக்கும்.

ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். 60 நாளில் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories