ஊரடங்கு காரணமாக மரத்திலேயே பழுத்து வெடித்து கிடைக்கும் பலாப்பழங்கள்!

கொரோனா ஊரடங்குக் காரணமாகக் கடலூரில் பலாப்பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால், அறுவடை செய்யாமல் மரத்திலேயே பலாப்பழங்கள் வெடித்து வீணாகின்றன.
பலாச் சாகுபடி (Jackfruit cultivation)
கடலூர் மாவட்டத்தில் செம்மண் பூமியான பண்ருட்டி, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, சிலம்பி நாதன்பேட்டை, விலங்கல்பட்டு, பெத்தாங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பில் பலா பயிரிடப்பட்டுள்ளது மற்றும்

பலா சீசன்(Jackfruit Season)
இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் துவங்கி, மே மாதம் வரை பலாப்பழ சீசன் ஆகும்.

வெளிமாநில விற்பனை (Other state Sales)
இந்தக் காலங்களில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் பலாப்பழங்கள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
மரங்கள் குத்தகைக்கு (Leasing of trees)
இதற்காக அங்கிருந்து மொத்த வியாபாரிகள் ஆண்டுதோறும் கடலூருக்கு வந்து பலாப்பழங்களைக் கொள்முதல் செய்வர். இதனைக் கருத்தில்கொண்டு, உள்ளூர் வியாபாரிகள், பலா மரங்களை விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்து, அறுவடை செய்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வர்.

வெடித்து வீணாகும் நிலை (Explosive waste level)
இதன்படி கடந்த பிப்ரவரி மாதம், பலாப்பழம் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் , பலாப்பழங்கள் மரத்திலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வாங்க ஆள் இல்லை (No Purchase)
இது குறித்து சேடப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஊரடங்குக் காரணமாகப் பலாப்பழங்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை.

அறுவடை (Harvesting)
அதையும் மீறி சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம்.

குறைந்த விலை (Low Price)
அந்தப் பழங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், சுற்றுப்பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம். ஆனாலும், முழுமையாக விற்பனையாவதில்லை.

பெரிய அளவில் நஷ்டம் (Large-scale loss)
ஆயிரக்கணக்கில் பலாப்பழங்கள் மரத்திலேயே வெடித்து, அழுகி வருகின்றன. இதனால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories