ஏற்றம் தரும் எலும்பிச்சை சாகுபடி

ஏற்றம் தரும் எலும்பிச்சை சாகுபடி முறைகள்

எலும்பிச்சை சாகுபடி முறைகள்
மருத்துவ பயன்
இரகங்கள்
எலுமிச்சையில் கிடைக்கும் பிற பொருட்கள்
தட்பவெப்பநிலை
நிலம்
இடைவெளி
நடவு
நீர்ப் பாய்ச்சுதல்
உரமிடுதல்
பயிர்ப் பாதுகாப்பு
நோய்
உரச்சத்துக் குறைபாடுகள்
மகசூல்

எலும்பிச்சை சாகுபடி முறைகள்

தமிழகத்தில் பயிராகும் பழமரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. எலுமிச்சை பழங்கள் பானங்கள் தயாரிப்பதற்கும், ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கும் உதவுகிறது. நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் எலுமிச்சை பயன்படுகிறது.

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. உலக நாடுகளில் 6வது இடத்தை இந்தியா வகிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகம், அஸ்ஸாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. மா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சைதான்.

எலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் வெப்பம் மிகுந்த தென்மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத் தருகிறது. எலுமிச்சையை கடல்மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம். பனிஉறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது. பலவகையான குணங்களை கொண்ட மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.  களிமண் நிலங்களிலும் தண்ணீர் எளிதில் வடியாத நிலங்களிலும் இதனை சாகுபடி செய்யமுடியாது. மேல்மண் ஆழமில்லாமலும், அடியில் பாறையுடன் இருந்தால் மரம் சில ஆண்டுகளில் நலிந்து இறந்துவிடும். எலுமிச்சை சாகுபடி செய்யும் தோட்டத்தில் தகுந்த வடிகால் வசதி அமைத்தல் அவசியம். எலுமிச்சை செடி வளர்ச்சிக்கு மண்ணில் கார, அமிலத்தன்மை இருத்தல் சிறந்தது. நல்ல வடிகால் வசதி உள்ள இருமண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது. பெரும்பாலும் விதையில் இருந்து வரும் கன்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும். இலை மொட்டு ஒட்டுதல், பதியங்கள் செய்தல் ஆகிய முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மொட்டுக்கட்டுதலினால் உண்டாகும் செடிகள் விரைவிலேயே பலன்தரும் பழங்களும் ஒரே சீரான அளவுடன் தரமுள்ளதாக இருக்கும். ஓராண்டு வயதுடைய கன்றுகள் நடவுக்கு சிறந்ததாகும். எலுமிச்சை புளிப்பு சுவைமிக்க மஞ்சள் நிறப் பழமான ஒருவகை தாவரம். இது சிட்ரஸ் லிமன் என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது தேசிக்காய், தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. பலவகைகளில் எலுமிச்சை பயன்படுவதால் இதற்கு எப்போதுமே கிராக்கிதான். மேலும், சீசன் அல்லாத கோடைக்காலத்தில் இவற்றின் விலை பன்மடங்கு அதிகமாகும் என்பதால், விவசாயிகள் எலுமிச்சையை பயிரிட்டால் நல்ல லாபம் அடையலாம்.

மருத்துவ பயன்

சளி, இருமல் குணமாகவும், அளவுக்கு மீறி போகும் பேதியை நிறுத்தவும் இதனை உபயோகிக்கலாம். மேலும் தேய்கடி விஷத்தை இறக்க, தலைவலி நிற்க, உஷ்ண வயிற்று வலி, நீர்க்கடுப்பு ஆகியவை குணமாக இதனை உபயோகிக்கலாம். மேலும் இரத்தக் கட்டுகளையும், பித்த சம்பந்தமான கோளாறுகள் குணமாகவும் இதனை உபயோகிக்கலாம்.

இரகங்கள்

பெரியகுளம் & 1 (பி.கே.எம். & 1)

இந்த இரகம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளத்திலிருந்து வெளியிடப்பட்டதாகும். இது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காடயம் வகையிலிருந்து தேர்வு செய்யப்பட்டதாகும். பழங்கள் பெரியதாகவும், சராசரியாக 52 கிராம் எடையும் இருக்கும்.  மேலும் பழங்களில் ஜூஸ் ( 52.3%), சராசரியாக ஒரு மரத்திலிருந்து 934 பழங்கள் (36.9 கிலோ) அறுவடைக்கு வரும் திறன் கொண்டதாகும்.

காசி நிம்போ

இது பெரும்பாலும் வடமாநிலங்களில் பயிர் செய்கின்றனர். இந்த இரகம் பெரும்பாலும்

கேங்கர் மற்றும் டிஸ்டீசா வைரஸ் நோய் தாக்கக் கூடியதாகும். சாதாரண எலுமிச்சைப் பழத்திற்கும், விதையில்லா எலுமிச்சைப் பழத்திற்கும் ருசி, மணம் ஆகியவற்றில் வித்தியாசம் கிடையாது. விதையில்லா எலுமிச்சைப் பழங்கள் பெரிதாக இருப்பதோடு (ஒரு பழத்தின் எடை சுமார் 100 கிராம்), விளைந்த பின்பும் வெளிர் பச்சை நிறமாகவே இருக்கும். மஞ்சள் நிறமாக மாறுவதில்லை. பழங்களில் விதையும் இருப்பதில்லை.

எலுமிச்சைச் சாகுபடி செய்வதில் பல அனுகூலங்கள் உண்டு. முக்கியமாக சாதாரண எலுமிச்சை பெரிய மரமாக வளர்வதால் குறைந்த பட்சமாக ஏக்கருக்கு 18′ என்ற இடைவெளியில் சுமார் 165 மரங்கள் நடலாம். விதையில்லா எலுமிச்சை இரண்டு வருடங்களிலேயே காய்க்கத் தொடங்கிவிடும்.

பழங்கள் அதிக எடை உள்ளதாகவும், ஒரு மரத்திற்கு அதிக எண்ணிக்கையில் காய்ப்பதாலும் விதையில்லா எலுமிச்சையில் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. பெரும்பாலும் வருடம் முழுவதும் பழங்கள் கிடைக்கும். விதையில்லா எலுமிச்சை மரங்களில் முள் இல்லாததாலும், சிறிய மரங்களாக உள்ளதாலும் பழங்களை சேதமின்றிப் பறிப்பது மிக எளிது. மைசூர் அருகே தென்னந்தோப்புகளில் விதையில்லா எலுமிச்சையை ஊடு பயிராக வளர்க்கிறார்கள்.

எலுமிச்சையில் கிடைக்கும் பிற பொருட்கள்

இப்பழத்திலிருந்து ஜூஸ் கான்சன்ட்ரேட் எடுக்கப்படுகிறது. பாட்டில்களில் அடைக்கப்படும் பானங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. மேல் தோலிலிருந்து எண்ணெய் (Lime oil) எடுக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக தோலிலிருந்து வாசனைத் தைலம் (Aroma) எடுக்கப்படுகிறது. அதற்கு கீழே உள்ளதொலியை பயன்படுத்தி பெக்டின் (Pectin) தயாரிக்கப்படுகிறது. பழச்சக்கை கோழித்தீவனமாக பயன்படுகிறது. உதிரும் பூக்களிலிருந்து சிறந்த மருந்து தயாரிக்கப்படுகிறது.

தட்பவெப்பநிலை

இதனைக் கடல்மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரை பயிர் செய்யலாம். இதற்கு வெப்பநிலையாக 20&300 சென்டிகிரேடு இருத்தல் வேண்டும். எலுமிச்சை பயிர் செய்ய 6.5&7.0 கார அமிலத் தன்மை இருத்தல் வேண்டும்.

நிலம்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் இப்பயிர் சாகுபடிக்கு மிக சிறந்ததாகும். களிமண், உவர் நிலம் ஆகியவை இதற்கு ஏற்றதல்ல. பாசன நீரின் பி.எச்.7 முதல் 7.5க்குள் இருக்க வேண்டும்.

இடைவெளி

3′ நீளம் 3′ அகலம் 3′ ஆழம் கொண்ட குழிகள் 18′ * 18′ என்ற இடைவெளியில் எடுத்து 10 நாட்கள் ஆறப்போட்டு பின்பு ஒரு குழிக்கு 5 கிலோ தொழுஉரம், 1 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் செம்மண் மற்றும் மேல் மண் கலந்து இடவேண்டும். ஒரு குழிக்கு 50 கிராம் லிண்டேன் 10% தூளையும் கலந்து இடவேண்டும்.

நடவு

எலுமிச்சை பெரும்பாலும் மொட்டுச் சேர்க்கை (Budding) முறையில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மேலும் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடவு செய்ய ஏற்ற மாதங்களாகும். செடியின் ஒட்டுக் கட்டப்பட்டுள்ள மொட்டு தரைக்கு மேல் 15 செ.மீ. உயரத்திற்குக் குறையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். செடிகளைச் சுற்றி வட்டப் பாத்தி அமைத்துப் பாசனம் செய்யலாம். அல்லது சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.

நட்ட செடிகளின் அருகே 3′ உயரமுள்ள குச்சி ஒன்றை நட்டு செடிகள் காற்றில் ஆடாதவாறு கட்ட வேண்டும். மாதம் ஒருமுறை செடிகளைச் சுற்றி செடிக்கு ஒரு லிட்டர் வீதம் வேப்பம் புண்ணாக்குக் கரைத்த நீரை ஊற்றி வந்தால் செடிகள் துரிதமாக வளரும்.

நீர்ப் பாய்ச்சுதல்

நிலத்தைப் பொறுத்து வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தால் அதிக மகசூல் கிடைக்கும். பராமரிப்பும் எளிதாக இருக்கும்.

கவாத்து செய்தல்

மரங்கள், தரையைத் தொடாமலிருக்க தரையிலிருந்து 2 1/2 உயரம் வரை தோன்றும் பக்கக் கிளைகளை வெட்டி விட வேண்டும். ஒட்டுக்கு கீழ் துளிர்க்கும் கிளைகளை நீக்கிவிட வேண்டும். பின்பு காய்ந்த கிளைகளை மட்டும் அப்புறப்படுத்தினால் போதுமானது. மரம் இயற்கையாகவே குடை போன்ற சாயலில் வளரும். வெட்டிவிட்ட கம்புகளில், வெட்டுப் பாகத்தில் உடனடியாக டைத்தேன் வி45 மருந்து தண்ணீர் கலந்து தடவ வேண்டும். இதன்மூலம் கொப்புகள் காய்வதைத் தடுக்கலாம்.

உரமிடுதல்

இம்மரங்கள் வருடம் முழுவதும் காய்ப்பதால் உரத்தை வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அடியில் உள்ள அட்டவணை அளவின்படி வைப்பது நல்லது. ஏக்கருக்கு 10 டன் வீதம் தொழுஉரம் வைக்க வேண்டும். இதுதவிர கீழ்க்கண்ட நுண்ணூட்டச் சத்துக்களை இலை வழியாக வருடத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம். நுண்ணூட்டச் சத்துக்கள் எலுமிச்சைச் செடிகளுக்கு மிக முக்கியமானதாகும். ஒரு ஏக்கர் எலுமிச்சைச் செடிகளுக்குக் கீழ்க்கண்ட நுண்ணூட்டச் சத்துக்களை 600 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

சிங்க் சல்பேட் / 6 கிகி

காப்பர் சல்பேட் & 4 கிகி

மெக்னீசியம் சல்பேட் & 3 கிகி

மங்கனீசு சல்பேட் & 3 கிகி

இரும்பு சல்பேட் & 3 கிகி

போராக்ஸ் & 1.5 கிகி

சுண்ணாம்பு & 10 கிகி

யூரியா & 10 கிகி

பயிர்ப் பாதுகாப்பு

முக்கியமாக பாதிக்கும் பூச்சிகள்:

இலைத்துளைப்பான்

(பில்லோக்னிஸ்டிஸ் சிட்ரெல்லா)

இலைகள் சுருங்கியும், உருமாறியும், மேல்புறம் உற்று நோக்கினால் நெளிநெளியாக மெல்லிய வெண்ணியத் தாள் போன்ற வடிவம் காணப்படும். பெரும்பாலும் உரம் வைத்து நீர்ப்பாய்ச்சிய பின் உண்டாகும் புதிய துளிர்களில் இலைத்துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். வெப்பமான சூழ்நிலையில் இதன் பாதிப்பு அதிகமாகலாம். மேலும் இதன் தாக்குதல் பாக்ˉரியச் சொறி நோய் ஏற்பட வழிவகுக்கும். இலைத்துளைப்பான் புழுக்கள் எலுமிச்சை இலையின் மேல் தோலிற்குக் கீழேயுள்ள இலைப்பகுதியினுள் துளைத்து அதிலுள்ள இலைத் திசுக்களை உண்ணுகின்றன. இவ்வாறு துளைக்கப்பட்ட இலைகள் சுருங்கி உருவம் மாறிவிடுகின்றன. பாதிக்கப்பட்ட மரங்களின்  வளர்ச்சி குறைந்துவிடும். இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஐந்து சத வேப்பம் புண்ணாக்குக் கரைசல் தெளிக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐம்பது கிராம் வீதம் வேப்பம் புண்ணாக்கை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்துத் தெளிவினை வடிகட்டி எடுக்க ஐந்து சதக் கரைசல் கிடைக்கும். இக்கரைசல் நன்கு இலைகளில் படிவதற்க்கு நூறு லிட்டர் கரைசலுக்கு ஐம்பது மில்லி சாண்டோவிட் அல்லது ஸ்டிக்கால் போன்ற திரவ சோப் அல்லது ஐம்பது கிராம் கதர் பார் சோப் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பின்னர் மறுமுறையும் தெளிக்க வேண்டும். மேலும் வேப்பம் புண்ணாக்குக் கரைசலில் உள்ள உரச்சத்துக்கள் பயிருக்கு ஊட்டத்தினை அளித்து வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றன.

நோய்

கேங்கர் நோய் & ஜேந்தோமோனாஸ் ஆக்சனோபோடிஸ் பிவிசிட்ரி :

நோய்களில் முக்கியமானது கேங்கர் அல்லது சொறி நோயாகும். இது ஒரு பாக்டிரியல் நோயாகும். கிளை, இலை, பழம் ஆகிய எல்லா பாகங்களையும் தாக்கிச் சொரசொரப்பான கொப்பளங்கள் தோன்றச் செய்கின்றன. இந்நோயைக கட்டுப்படுத்த அக்ரிமைசின் அல்லது பிளாண்டாமைசின் மருந்தை நான்கு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். 1 சதவீத போர்டோ கலவை தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

உரச்சத்துக் குறைபாடுகள்

விதையில்லா எலுமிச்சைச் செடிகள் உரச்சத்துக் குறைபாட்டினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. தழைச்சத்துக் குறைந்தால் இலைகள் வெளிறி மரத்தின் வளர்ச்சி குன்றிவிடுகிறது. சிங்க் சத்து குறைபாட்டினால் இலைகள் ஒருவிதமாக சுருண்டுவிடும். இலைகளின் நரம்பு மட்டும் பச்சையாக இருக்கும். மற்ற பகுதிகள் வெளிறிவிடும். இளம் இலைகளில் இது நன்றாகத் தெரியும். மெக்னீசியம் குறைபாடு இருந்தால் இலைகளின் நடு நரம்பும் அதை ஒட்டி இருபுறமும் மஞ்சளாக மாறிவிடும். மங்கனீசு சத்துக்குறைந்தால் இலை நரம்புகள் ரும் பச்சை வலை போன்ற தோற்றத்தைத் தரும்.

போரான் சத்துக் குறைந்தால் முற்றிய இலைகளின் நரம்புகள் மஞ்சள் கலந்த மண் நிறமாக மாறிவிடும். நரம்புகள் பருமனாகி, நீளவாக்கில் வெடிப்புகளும் தோன்றுகின்றன. காப்பர் சத்து குறைந்தால் கொப்புகள் நுனியிலிருந்து காயத் தொடங்குகின்றன. காய்ந்த கொப்புகளிலிருந்து பிசின் போன்ற திரவம் வெளிவரும். இலைக் காம்புகளிலிருந்து பல முளைகள் தோன்றி சூம்பிப் போன கிளைகள் துளிர்க்கும். இரும்புச் சத்துக் குறைபாட்டால் இலையின் நரம்புகள் மட்டும் பச்சையாக இருக்கும். மற்ற இடங்கள் வெளிறிவிடும். உரச்சத்துக் குறைபாடுகளைப் போக்க ஏற்கனவே கூறியபடி நுண்ணூட்டச் சத்துக்களை நீரில் கரைத்து இலை மீது படும்படியாகத் தெளிக்க வேண்டும்.

மகசூல்

விதையில்லா எலுமிச்சை மரங்கள் இரண்டாவது ஆண்டு முதலே காய்க்கத் தொடங்குகின்றன. மற்ற வகைகள் நட்டு 3 & 5 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும்.

சராசரியாக ஒரு மரத்திற்கு மூன்றாவது ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு சுமார் 400 காய்கள் கிடைக்கிறது. ஐந்தாம் ஆண்டு முதல் 1500 முதல் 2000 காய்கள் வரை கிடைக்கிறது. பழங்களின் எடை சராசரியாக ஒரு பழத்திற்கு சுமார் 60&80 கிராம் இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories