சாத்துக்குடி எப்படி பயிரிடுவது

 

 

ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடவு செய்யலாம்.

தண்ணீர் தேங்காத செம்மண் மற்றும் செம்மண் கலந்த சரளை மண் நிலங்கள் ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.

நிலம் தயாரித்தல்

சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது 20 அடிக்கு 20 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள அகல ஆழத்தில் குழி எடுத்துக்கொள்ளவேண்டும். குழியில் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றைக் கலந்து இட்டு 15 நாள் ஆறப்போட வேண்டும்.

விதைத்தல்
குருத்து ஓட்டு செடிகள் நடுவதற்கு பயன்படுத்த வேண்டும். ஒட்டுப் பகுதி தரைக்கு மேல் அரை அடி உயரத்தில் இருப்பது போல நடவு செய்ய வேண்டும் .செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க நீளமான குச்சியை ஊன்றி செடியுடன் இணைத்துக் கட்ட வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்டவேண்டும் .செடியின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories