மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியை சேர்ந்தவர் அரசு. பட்டப் படிப்பு முடித்து விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர் . சிவப்பு கொய்யா சாகுபடியில் கவனத்தை செலுத்தினார். இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லியை பயன்படுத்தியதால் நல்ல மகசூல் கிடைத்தது அவருக்கு .
அரசு கூறியது :
சந்தைப்பட்டி வகுரணியில் தோட்டம் உள்ளது. குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சிவப்பு கொய்யா சாகுபடியில் ஈடுபட்டேன்.
இதற்காக விருதுநகரில் இருந்து தைவான் பிங்க், அர்க்காகிரண் வகை கொய்யா கன்றுகள் வாங்கி நடவு செய்தார் .
ஒன்றரை ஏக்கரில் ஏழு அடி இடைவெளியில் முதல்கட்டமாக 600 கன்றுகள் நட்டு ஆறு மாதம் பராமரித்தேன்.
அடுத்ததாக மேலும் 600 கன்றுகளை நடவு செய்துள்ளேன். எள், கடலை, வேம்பம் பிண்ணாக்கு, மீன் அமிலம், ஜீவாமிர்தம் என இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகளை பயன் படுத்தி வருகிறேன். ஒரு மாதமாக கொய்யா நன்கு விளைந்துள்ளது
.தினமும் 10 முதல் 15 கிலோ வரை அறுவடையாகிறது. சொட்டு நீர் பாசனம் மூலம் தேவையான இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.
பழங்கள் அறுவடை செய்யும் போதே வாரம் தோறும் மரங்களை கவனித்து தேவையற்ற கொப்புகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதால் மரங்கள் உயரமாக வளராமல் பக்க கிளை களுடன் குறைவான உயரத்திலேயே வளர்கிறது.
அடுத்து ஆறு மாதங்களில் இரண்டாம் கட்டமாக நடவு செய்த கொய்யா மரங்களும் காய்ப்புக்கு வந்துவிடும். சராசரியாக செடிக்கு 2 கிலோ கிடைத்தாலே பத்து டன்னுக்கு மேல் பழங்கள் கிடைக்கும். மொத்த விலையில் சிவப்பு கொய்யா கிலோ ரூ. 30 முதல் ரூ.40 வரை கிடைக்கிறது.
ஒன்றரை ஏக்கர் கொய்யா நடவு செய்ய கன்றுகள், குழி தோண்டுதல், சொட்டு நீர், நடவு, இயற்கை உரம் என ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் செலவானது. அடுத்த ஆண்டில் பழங்கள் கூடுதலாக வாய்ப்பு உள்ளது என்று கூறினார் .
சிவப்பு கொய்யா சாகுபடி ஆலோசனைக்கு 8667570675