நஷ்டமின்றி விவசாயம் செய்து வருகிறார்

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் – பெரியபாளையம் சாலையில், பண்ணை நடத்தி வரும், அனுராதா சொல்கிறார் :

சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த நானும், என் கணவரும், ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்தோம். திரும்ப அவர் மட்டும் கிளம்பி சென்ற நிலையில், இங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த நான், அதை விட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கினேன்.
ஆரம்பத்தில், நிலத்தை திருத்தும் வேலைகளுக்கு, நிறைய பணம் செலவானது. பல்வேறு புத்தகத்தை படித்து, இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறையை தெரிந்து கொண்டேன்.
இந்தப் பண்ணையில், இரண்டு வகையான மண் உள்ளது. ஆரம்பத்திலேயே, மணல் கலந்த களிமண் பகுதியை, மரங்களுக்கு ஒதுக்கிட்டேன்.
களிமண் பகுதியை, நெல், காய்கறிகளுக்கு ஒதுக்கி, பயிர் செய்து வருகிறேன்.மா, வாழை மரங்களுக்கிடையில் ஊடுபயிராக, எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா உள்ளன. காய்கறிகள், பழங்களை, எங்கள் வீட்டில் வைத்து விற்றும், சில இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்பி வருகிறேன்.
பசுமையாக, 8 ஏக்கரையும் வைத்திருப்பதுடன், 23 சென்டில், பண்ணைக் குட்டை அமைத்து, மழைநீரை சேமித்து, அதில், கட்லா, ரோகு, புல்கெண்டை மீன்களையும் வளர்த்து வருகிறேன்.
பண்ணைக்குட்டை இருப்பதால், கிணற்றிலும் நீர் வற்றுவதில்லை.மேலும், 15 பசு மாடு, கன்றுகளை வளர்க்கிறேன். மாட்டு கொட்டகை அருகிலேயே, சிமென்ட் தொட்டியில், சாணம், கோமியம், இலைதழை, தென்னை மட்டை போட்டு மட்க வைத்து, உரமாக பயன்படுத்துகிறேன்.
அது போக, ஜீவாமிர்தம், அமுதக்கரைசல், பூச்சிவிரட்டி, மீன் அமினோ அமிலம், முருங்கை கரைசல் தயாரித்து பயன்படுத்துகிறேன்.
விளைபொருட்களை, ஒரு பகுதியையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், நல்ல லாபம் எடுக்க முடியும். மதிப்புக் கூட்டல், நேரடி விற்பனை இரண்டும் தான், என் பலம்.
தர்ப்பூசணி மூலமாக ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய்; தேன் நெல்லி, நெல்லி பவுடர், நெல்லி ஜூஸ் மற்றும் நெல்லி வாயிலாக, 1 லட்சம்; அரிசி விற்பனையால், 44 ஆயிரம்; பந்தல் காய்கறி சாகுபடி, 50 ஆயிரம்; மாம்பழம், 80 ஆயிரம்; மற்ற காய்கறி, பழங்கள், 20 ஆயிரம் ரூபாய் என, மொத்தமாக, 8 ஏக்கரையும் சேர்த்து, ஆண்டுக்கு, 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றார் .
இதில், 50 ஆயிரம் ரூபாய் செலவு போக, 2.50 லட்ச ரூபாய் லாபம் வரும். என் கணவர் சொன்னபடி, நஷ்டம் இல்லாமல், விவசாயம் செய்து வருகிறேன் என்றார் .
தொடர்புக்கு: 9940542355 .

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories