பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும் அதிக அளவிலும் அழித்து விடுகிறது.
நுரையீரல் மற்றும் குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஒரு ஸ்பூன் மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகையை தடுக்கும் மாதுளம் பழம் உதவுகிறது.
மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் தீரும்.
இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும் மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.