எந்த வகை மண்ணாக இருந்தாலும் சிறப்பாக வளரும் என்பதுதான் ரோஜா செடியின்சிறப்பு

பயன் தரும் ரோஜா!

 

எந்த வகை மண்ணாக இருந்தாலும் சிறப்பாக வளரும் என்பதுதான் ரோஜா செடியின்சிறப்பு. ரோஜாக்கள் சமவெளிப் பகுதிகளில் நன்றாகவே வளரக்கூடியது. முதலில்நிலத்தைச் சுற்றி இருக்கும் புல், புதர்களை வெட்டி எடுத்துவிட்டு, நிலத்தை ஒரு உழவுபோடவேண்டும். பின் முக்கால் அடி அகலம்-நீளம்- ஆழம் கொண்ட குழி எடுத்து, ஒரு வாரம் ஆற போட வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் ஏழு அடி இடைவெளியும்,வரிசைக்கு வரிசை நாலு அடி இடைவெளியும் விட்டு, ஒவ்வொரு குழிக்கும் பத்துகிலோ எரு போட்டு, நட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஆயிரத்து ஐநூறு செடிகள்தேவைப்படும். ரோஜா நாற்றை பதியன் மூலமாகத்தான் உற்பத்தி செய்யமுடியும்பதியன்களை மழைக் காலத் தில்தான் நட வேண்டும். கோடைக் காலத்தில் நடுகை  செய்தால் காய்ந்துவிடும். நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும். செடியில்வேர் பிடிக்கும் வரை இரண்டு நாளைக்கு ஒரு தண்ணீரும், வேர் பிடித்த பின்வாரத்துக்கு ஒரு தண்ணீரும் விடவேண்டும். நிலத்தின் தன்மையைப் பொருத்துதண்ணீர் பாய்ச்சும் காலம் மாறுபடலாம்.

தேவைப்பட்டால் 40 நாட்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். மொத்தம்நான்கு அல்லது ஐந்து களை எடுக்க வேண்டியிருக்கும். களை எடுத்த உடனே டி.ஏ.பி-யும், கடலை புண்ணாக்கும் கலந்து மண் அணைக்க வேண்டும்.

பூச்சிகளை விரட்டுவது எப்படி?

ரோஜாவைத் தாக்கும் வண்டுகளைக் கட்டுப்படுத்த ‘ஆர்கானோ குளோரின்’ மருந்தைதெளித்து கட்டுப்படுத்தலாம். சிவப்பு செதில் பூச்சி தாக்கினால், பாதிக்கப்பட்டகிளையை உடனே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பிறகு, மீன் எண்ணெய்சோப்பை 25 கிராம் வாங்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கவேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த (அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி) ஒருலிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெயை மூன்று மி.லி. கலந்து தெளிக்கலாம். சாம்பல்நோய் தாக்கினால் ஒரு லிட்டர் தண்ணீரில் கார்பன்டைசிம் 2 கிராம் அல்லது ஒருகிராம் கலந்து தெளித்தால் போதும்.

நடவு செய்த ஆறு மாதத்தில் பூ வரத் தொடங் கிவிடும். அதிலிருந்து நாள்தோறும் பூஎடுக்கத் தொடங்கலாம். இருபது வருடங்கள் வரை இந்தச் செடிகள் பலன்கொடுக்கும். அக்டோபர் மாதத் தில் முன் பருவத்தில் வந்த கிளைகளை பாதிஇருப்பது போல் வெட்டிவிட வேண்டும். செய்யும் காலத்தில் நான்கு மாதம் பூகிடைக்காது. வருஷத்தில் மொத்தம் எட்டு மாதம்தான் பூ கிடைக்கும். நோய் தாக்கியசெடிகளையும், வளர்ச்சி இல்லாத மற்றும் குறுக்கு நெடுக்குமாக வளர்ந்தி ருக்கும்செடிகளையும் கவாத்து செய்யவேண்டும். கவாத்து செய்யப்பட்ட கிளையின் முனைப்பகுதியில் போர்டோ கலவையை தடவவேண்டும் அல்லது பைட்டோலான்மருந்தோடு நனையும் கந்தகத்தை சேர்த்து பசை மாதிரி தயார் செய்து தடவவேண்டும். இந்தப் பசையை தடவினால் பூஞ்சணம் தாக்காமல் இருக்கும். கவாத்து செய்துவிட்டசமயத்திலும் கத்தாளைப் பூச்சித் தாக்குதல் இருக்கும். இதைத்தடுக்க தொடர்ந்துமருந்து தெளித்தாலே போதும்.

தொடக்கத்தில் 15 கிலோவில் இருந்து 30 கிலோ வரைக்கும் பூக்கள் கிடைக்கும். நாளாக, நாளாக 50 கிலோ வரை பூ எடுக்கலாம்.

ரோஜா சாகுபடியில் உயர்தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றினால் கூடுதல்மகசூலும், அதிக லாபமும் ஈட்டலாம்

ரகங்கள்: எட்வர்ட் ரோஜா,

மண்வகை: வடிகால் வசதியுள்ள மணற்சாரி வண்டல்.

இடைவெளி: வரிசைக்கு வரிசை 2 மீட்டர், செடிக்குச் செடி 1 மீட்டர் என்றஇடைவெளி அவசியம். ஒன்றரை அடி கன அளவுள்ள குழிகள் தேவை. நடுவதற்குமுன் குழிக்கு 10 கிலோ தொழு உரம், 20 கிராம் லிண்டேன் தூள் இட வேண்டும்.

நீர்ப்பாசனம்: புதுத் தளிர் விடும்வரை இரு நாள்களுக்கு ஒரு முறையும், பின்னர் வாரம்ஒரு முறையும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உர அளவு: ஜூலையில் ஒரு முறையும், கவாத்து செய்த பின்னர் அக்டோபரில் ஒருமுறையும் என இரு முறை செடிக்கு 10 கிலோ தொழுஉரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு: ரோஜாவில் செதில் பூச்சி, மாவுப் பூச்சி, மொட்டுப் புழு,இலைப்பேன், அசுவிணி தத்துப் பூச்சிகள் தாக்கும் வாய்ப்புள்ளது. இவற்றைக்கட்டுப்படுத்த தகுந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டியதுஅவசியம்.

மாவுப்பூச்சி கட்டுப்பாடு: ஒரு லிட்டர் தண்ணீர்க்கு 2 மி.லி. என்ற அளவில்மானோகுரோட்டோபாஸ் அல்லது மிதைல் பாரத்தியான் கலந்து தெளிக்க வேண்டும்.

மொட்டுப்புழு கட்டுப்பாடு: பூக்கும் தருணத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் மானோ குரோட்டோபாஸ் மருந்துதெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

இலைப்பேன், அசுவிணி, தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூன்று சதவீத வேப்பஎண்ணெய் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. பாசலோன் கலந்துதெளிக்கலாம். மிதைல் ஓ டெமட்டான் மருந்தும் பயன்படுத்தலாம்.

நோய்கள்: இலைகளில் வட்ட வடிவில் கரும்புள்ளிகள் தோன்றி, இலைகள்உதிர்வதை தடுக்க கார்பண்டசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்றஅளவில் கலந்து மாதம் இரு முறை தெளிக்க வேண்டும். சாம்பல் நோயைக்கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பண்டசிம் அல்லது 2 கிராம்நனையும் கந்தகம் கலந்து தெளிக்கலாம்.

மகசூல்: முதலாம் ஆண்டே ரோஜா பூக்க ஆரம்பிக்கும். இருப்பினும் பொருளாதாரரீதியாக இரண்டாம் ஆண்டு முதலே நல்ல பலன் கிடைக்கும். கவாத்து செய்த45ஆவது நாள் முதல் பூக்கத் தொடங்கும். மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்கவேண்டும். இத்தகைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் ஓராண்டில் ஒரு ஏக்கர்பரப்பில் 4 லட்சம் மலர்களைப் பறிக்க முடியும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories