காக்கரட்டான் பூ சாகுபடியில் புழு தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல்
காக்கரட்டான் பூவில் பச்சைப்புழு தாக்குதல் மழை, பனி காலத்தில் பூச் செடியைத் தாக்கும். சிறிய புழுக்கள் பூவிற்குள்ளே சென்று இதழையும், பூக்காம்பையும் சாப்பிடும்.
கட்டுப்படுத்தும் முறை
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சம அளவு எடுத்து ( ஒரு ஏக்கருக்கு அரைக்கிலோ பயன்படுத்தலாம்) தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து அவற்றை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளிக்கவும் இவ்வாறு தெளித்த உடன் பூழுவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி உண்ண விடாமல் தடுக்கும் புழு பட்டினி கிடந்து இறக்க நேரிடும். முட்டை இடுவது தடைபடும்
இரசாயின முறையில் கட்டுப்படுத்த
ஒரு லிட்டர் தண்ணீருக்கு குவினல்பாஸ் 4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
செவ்வட்டை நோய் தாக்குதலின் அறிகுறி
செடியின் இலை பகுதியில் சிறு சிறு புள்ளிகள் தோன்றும்; இலை மஞ்சள், சிவப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடும் கணு பகுதி கருகியது போல காணப்படும். ஆங்காங்கே வெட்டியது போல இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அல்லது
டைத்தேன் எம். 45,ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம்