குண்டுமல்லி அதிகமகசூல் பெற வழிமுறைகள்

குண்டுமல்லி விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை கொடுக்கக்கூடியது. நுன்னூட்ட சத்துக் குறைபாட்டால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி தடைபடும். இதைத் தடுத்து நிறுத்த நுண்ணூட்ட உரங்களான பெர்ரஸ் சல்பேட், மெக்னீசியம் சல்பேட், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட் ஒரு தண்ணீர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் கலந்து நுன்னூட்ட சத்து பாதிப்படைந்த தருணத்திலும் 15 நாட்களுக்கு பிறகு ஒருமுறையும் என இருமுறை இலைவழி மூலம் தெளிக்க வேண்டும் .ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இறுதியில் தரையில் இருந்து 50 சென்டி மீட்டர் உயரத்தில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும். பகுதிகளை பாதுகாக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு பூஞ்சானக் கொல்லியை வெட்டிய பகுதிகளின் மேல் தடவ வேண்டும். தொழில்நுட்பத்தை ஆகஸ்ட் செப்டம்பரில் கடைபிடித்தால் குளிர் காலங்களில் குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரியில் பூக்கள் உருவாவதற்கு வழிவகை செய்கிறது .மல்லிகை சாகுபடியின் மகசூல் அதிகரிக்க தொடர்ந்து மகசூல் கிடைக்க இறைவனைஇலை வழி மூலம் உயிர் ஊக்கிகள் தெளிப்பது நல்ல பலனைத் தரும். பஞ்சகாவியா 3%,ஹியூமிக் அமிலம் 0.4% கரைசல் தனித்தனியாக மாதம் ஒரு முறை இலை வழி மூலம் தெரிவித்தால் பூக்களின் தரம் மேம்படுவதோடு மகசூலும் அதிகரிக்கும் என திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம வேளாண் அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories