சம்பங்கியில் மொட்டு துளைப்பானை தடுக்கும் வழிமுறைகள் எவை?

கற்பூர கரைசல் மற்றும் ஏற்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் இவை இரண்டையும் மாறி மாறி தெளித்து வந்தால் சம்பங்கியில் மொட்டு துளைப்பானைக் கட்டுபடுத்தலாம்.

திறன் நுண்ணுயிர் கரைசல் தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவைப்படும்?

திறன் நுண்ணுயிர் கரைசல் தயாரிக்க மரம், செடி ,கொடிகளின் வேர்ப்பகுதியில் மண் அரை கிலோ ( 10 திற்கும் மேற்பட்ட மரம்,செடி) பரங்கி பழம் 2 கிலோ, பப்பாளி பழம் 2 கிலோ, வெல்லம் ஒரு கிலோ, நாட்டுக்கோழி முட்டை இரண்டு அல்லது மூன்று மற்றும் தேவையான அளவு நீர் ஆகியவை தேவைப்படும்.

வல்லாரை செடிகளில் பூச்சி தாக்குதல் இருந்தால் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

வல்லாரை செடிகளின் இலைகளில் பூச்சி தாக்குதல் இருந்தால் இஞ்சி .பூண்டு .பச்சை மிளகாய் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இலைகள் பழுத்து ஏதேனும் இருந்தால் அதற்கு கற்பூரகரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தெளித்து குணப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories