சம்பங்கி பூ தொடரும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

பவானிசாகர் பகுதிகளில் விளையும் சம்பங்கிப்பூ தொடர்ந்து அதிகப்படியாக விலை சரிந்து வருவதால் பூ விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கிப் பூ தற்போது விலை சரிந்து ரூ.30க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கி பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

தினமும் 2 டன் சாகுபடி
மேற்கூறப்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 2 டன் பூக்கள் விளைகிறது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர் என்றார்.

விலை வீழ்ச்சி
பவானிசாகர் பகுதியில் கடந்த மாதம் இறுதியில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ.140 வரை விற்பனையானது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை குறைந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி சம்பங்கி பூ கிலோ ஒன்று ரூ.50 ஆக இருந்தது மற்றும்

கிலோ ரூ.30க்கு விற்பனை
நேற்று முன்தினம் சம்பங்கி பூ கிலோவுக்கு மேலும் ரூ.10 குறைந்து ரூ.40-க்கு விற்பனை ஆனது. நேற்று சம்பங்கி பூ மேலும் ரூ.10 குறைந்து கிலோ ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி பூ விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories