நடவு முறை மற்றும் இடைவெளி
25 நாள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். குட்டை வீரிய ஒட்டு ரகங்கள் 40 ஒ 30 சென்டிமீட்டர் அளவில் ஒரு லிட்டருக்கு 74 ஆயிரம் செடிகளை நடலாம்.
நெட்டை வீரிய ஒட்டு ரகத்தை 60 ஓ 30 சென்டி மீட்டர் என்ற அளவில் 55 ஆயிரம் செடிகளை நடலாம்.
நீர்ப்பாசன மற்றும் நீர் வழி உரமிடுதல்
வீரிய ஒட்டுரக ரகத்துக்கு 90:90:75 ஆகியவற்றை பயிர் காலம் முழுவதும் நீர்பாசனதுடன் இட வேண்டும்.செடியின் வளர்ச்சிக்கு அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் தெளிக்க வேண்டும். பூச்சித்தாக்குதல் இருந்தால் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிக்கலாம்.
களை எடுத்தல்
நடவு செய்த 30 ,60 நாட்களில் களை எடுக்க வேண்டும்.
மண் அணைத்தல்
களை எடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இதுவே நன்கு பேர் பிடிக்கவும் செடியினை தாங்குத் திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.
அறுவடை
மேற்கண்ட முறைகளை முறையாக கடைபிடித்தால் நடவு செய்த 60-ம் நாளிலிருந்து மகசூல் கிடைக்கும்.