புதினாவில் இலைகள் அதைசுருள்வதை எவ்வாறு தடுப்பது?
இலைகள் சுருங்குவதற்கு பூச்சித்தாக்குதல் கூட காரணமாக இருக்கலாம். எனவே ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னிம் கலந்து தெளிக்க வேண்டும் .இதன் மூலம் இலைகள் சுருள் வது தடுக்கலாம்.
இலைப்பேன் மற்றும் குருத்துப் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு என்ன?
இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
குருத்துப் பூச்சியை தட்டை பயிரை ஊடுபயிராக பயிரிட்டு கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
நெல் பயிரில் சில இடங்களில் மஞ்சளாக காணப்படுகிறது. பூச்சி இல்லை. என்ன பற்றாக்குறையினால் அப்படி இருக்கிறது?
மஞ்சள் நிறமாக காணப்படுவதற்கு நைட்ரஜன் பற்றாக்குறை காரணமாகும். இதற்கு பஞ்சகாவிய கரைசலைத் தெளிக்கலாம் அல்லது நீர் பாசனம் வழியாக கொடுக்கலாம்.
வயலில் அசோலாவை விடுவதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை கிரகித்துக் பயன்படும் வகையில் நைட்ரஜனை மாற்றித் தருகிறது. இதன்மூலம் நைட்ரஜன் பற்றாக்குறையை தீர்க்கலாம்.
நாற்று நடும் முன்பு வயலில் பசுந்தாள் உரங்களை பயிரிட்டு மடக்கி விடலாம் அல்லது உயிரி உரங்களை இடலாம்.
செண்டு மல்லியில் இலை கருகல் ஏற்படுகிறது என்ன செய்ய வேண்டும்?
ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.
மாட்டிற்கு தாது உப்புடன் கல்லுப்பு சேர்த்துக் கொடுக்கலாம்?
30 கிராம் தாது உப்புஉடன் 30 கிராம் கல்லுப்பு சேர்த்து மா ட்டிற்கு தண்ணீருடன் கலந்து கொடுக்கலாம்.