செம்பருத்தி சாகுபடி!

செம்பருத்திக்கு செவ்வரத்தை, செம்பரத்தை என்று வேறு பெயர்களும் உண்டு. இது தென் கொரியா மற்றும் மலேசியாவின் தேசிய மலராகும். சீன ரோஜா என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. இது மூலிகை மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது .இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தியை சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெறுவதற்காக வழிமுறைகளை குறித்து இங்கு காணலாம்.

என்னென்ன வகைகள் உண்டு?

கோ 1 ( ஈரடுக்கு வகை ,கோ 1 ( மஞ்சள் பூவில் சிவப்பு நிற புள்ளிகள்,கோ 3 மஞ்சள் ,சிவப்பு நிற மலர் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

ஆனி – ஆடி பட்டங்கள் ஏற்றவை.

அதாவது ஜூலை -ஆகஸ்ட் மாதங்களில் செம்பருத்தியை நடவு செய்ய வேண்டும்.

செம்மண் அல்லது களிமண் நிலங்களில் நன்றாக வளரும்.

செம்பருத்தி சாகுபடிக்கு தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது இரண்டு நாள் காய விட வேண்டும்.ரோட்டை வெட்டர் மூலம் உழுது 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும்.

மேலும் ஒரு ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்க வேண்டும். பிறகு ஒவொரு குழிக்கும் சொட்டு நீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழியிலும் தலா ஒரு கிலோ அளவு மக்கிய சாணம் இட்டு தண்ணீர் விட்டு ஒரு வாரம் ஆறவிட வேண்டும்.

குழியின் நடுவில் கன்றை நடவு செய்து மேல் மண் கொண்டு மூடி தண்ணீர் பாய்ச்சவேண்டும். நடவு செய்த 10-ம் நாள் செடிகளின் தூரில் மண் அணைத்து விட வேண்டும். மண் காயாத அளவுக்கு நீர் பாய்ச்சி வர வேண்டும்.

நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். பூக்கள் பூக்கத் தொடங்கி பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் கலந்து பாசன நீருடன் தரவேண்டும்.

முதல் 8 மாதம் வரை மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். பொதுவாக இதில் நோய் எதுவும் தாக்குவது இல்லை. சில சமயங்களில் மாவுப்பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும். நோய் பூச்சி தாக்குதல் இருந்தால் இஞ்சி, பச்சை மிளகாய்,பூண்டு கரைசலை செடிகளின் மீது தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தினமும் சராசரியாக ஒரு ஏக்கரில் இருந்து 8 கிலோ பூக்கள் வரை அறுவடை செய்யலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories