செவ்வந்தி பூ நடவு செய்து 25 நாட்கள் ஆகிறது என்ன உரம் கொடுக்கலாம்

மாதம் ஒருமுறை நுண்ணூட்ட சத்துகள் வேருக்கு அருகே இட்டு தண்ணீர் கட்டவேண்டும் .உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ்பைரில்லம், பாக்டீரியா மற்றும் போட்டாஸ், VAMஇவற்றை தொழு உரத்துடன் கலந்து சிறிது வெல்லம் தயிர் கலந்து மூன்று நாட்கள் நிழலில் வைக்க வேண்டும் .பிறகு மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி பிறகு வேறு இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும் .செடிகளில் அதிக பூக்கள் பூக்கும்.

இந்த மாதத்தில் என்ன வகை பயிரிடலாம்.

செப்டம்பர்: ( ஆவணி புரட்டாசி) செடி முருங்கை கத்திரி முள்ளங்கி கீரை பீர்க்கன் பூசணி ஆகியவற்றை பயிர் செய்யலாம்

களிமண் தரையில் எந்த ரக வாழை நன்கு வளரும்

ரஸ்தாளி, செவ்வாழை,நேந்திரம், ஏலக்கிஆகிய ரகங்களைப் பயிரிடலாம் .அருகில் உள்ள மண் ஆய்வகத்தில் தங்களின் வயலில் உள்ள மண்ணின் தன்மையை பரிசோதித்து பிறகு ரகங்களைத் தேர்வு செய்வது நல்லது.

ஓடகால் பகுதியில் மா மரம் நடவு செய்யலாம?

வேர் உள்ள இடத்தில் நீர் தேங்காமல் வடிகால் வசதி இருப்பின் நடவு செய்யலாம்.
.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories