களை நிர்வாகம்
8 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். பிறகு தேவைக்கேற்ப களை எடுக்கவேண்டும். 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதியை அல்லது முதல் பூ மொட்டுகளை கிள்ளி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிளைகள் அதிகம் தோன்றி அதிகமான பூ மொட்டுகள் உண்டாகும்.
வேர் அழுகல் நோய்
வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து செடிகளைச் சுற்றி ஊற்றவேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோய் நோயை கட்டுப்படுத்த பெவிஸ்டின் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சிவப்பு சிலந்தி பூச்சிகள்
சிவப்பு சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்த கேள் தேன் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
நட்ட 60ம் நாளில் இருந்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் 80 முதல் 90 சதவீதம் வரை மலர்கள் மலர்ந்த பூக்களை மூன்று நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 18 டன் பூக்கள் வரை மகசூல் கிடைக்கும்.