பூக்கள் சீராகவும், பெரிதாகவும் வளர உதவும் தேங்காய் தண்ணீர்……

பூக்கள் ஒரே சீராகவும்,அதேசமயம் பெரியதாகவும் வளர்த்து இருந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். இதற்கு தேங்காய் தண்ணீர் வைத்தியம் கை கொடுக்கும்.

முற்றிய தேங்காயின் தண்ணீர் 50 லிட்டர் அளவு எடுத்துக் கொண்டு, மாதம் இரண்டு தடவை தெளிப்புநீர் வழியே செடிகள் நன்றாக நனையும்படி கொடுக்க வேண்டும். இதிலுள்ள இனிப்புத் தன்மை,தேனீக்களை அதிக அளவில் செடிகளின் பக்கம் ஈர்த்து,அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துவதால்,அழகான பெரிய பூக்கள் கிடைக்கின்றன.

கொப்பரை உற்பத்தி செய்யும் உலர்களன்கள் பிரபலமான கோயில்,ஹோட்டல் என்று தேங்காய்கள் பெரிதாகப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால்,தேவையான தேங்காய் தண்ணீரைப் பெற முடியும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories