மதுரை மல்லி அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது!

புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி மற்றும் பாரம்பரியப் பூக்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

அமெரிக்கா ஏற்றுமதி (Exports to the United States)
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றார்.

பாரம்பரியப் பூக்கள் (Traditional flowers)
புவிசார் குறியீடு பெற்ற மதுரை மல்லி மற்றும் பாரம்பரியப் பூக்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

புவிசார் குறியீட்டு சான்றிதழ் (Geographical Certificate)
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, மேரிகோல்டு போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா மற்றும் துபாய்க்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.

வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் (Vanguard Exports)
நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவில், பதிவு செய்யப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த பூக்களைப் பெற்றது எனவே

வாடாமல் இருக்க (Do not rot)
மலர்கள், நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதற்காகத் தகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கேஜிங் முறையை வழங்கி, ஏற்றுமதியாளர்களுக்கு கோவையில் உள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் வளர்ப்புத் துறை ஆதரவளித்தது. தரமான மலர்களைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தினர்.

வேலைவாய்ப்பு (Employment
இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது மற்றும்

அமெரிக்கா (United States)
இந்த ஏற்றுமதி சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, துபாய் மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தினர், நறுமணம் கமழும் மலர்களைப், பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின் போது தங்களது இல்லங்களில் உள்ள இறைவனுக்கும் ஆலயங்களிலும் பயன்படுத்த உதவிகரமாக இருக்கும்.

ரூ.66.28 கோடி மதிப்பில் ஏற்றுமதி (Exports worth Rs 66.28 crore)
இந்த ஆண்டில் ரூ.66.28 கோடி மதிப்பிலான மல்லிகைப் பூக்கள் மற்றும் பூங்கொத்துகள் (மல்லிகை மற்றும் இதர பாரம்பரிய மலர்களை உள்ளடக்கியது) அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதில் ரூ.11.24 கோடி மதிப்பிலான மலர்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை விமான நிலையங்கள் வாயிலாகத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது இதில்

மதுரை மல்லியின் மகத்துவம் (The majesty of Madurai Malli)
உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற மலர்களுள் மதுரை மல்லிகையும் ஒன்று. அதன் நறுமணம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பேரழகுக்கு இணையான புகழைப் பெற்றது. மல்லிகையின் முக்கிய சந்தையாக உருவாகியுள்ள மதுரை, இந்தியாவின் மல்லிகை தலைநகரமாகவும் வளர்ந்துள்ளது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories