மனதை மயக்கும் மாடி வீட்டு ரோஜா-இயற்கை முறையில் பராமரித்தல்!

காலம் எவ்வளவுதான் மாறினாலும், இயற்கைக்கு நிகர் வேறு எதுவுமில்லை. அந்த வகையில் மலர்களை, பூக்களைப் பார்க்கும்போது, நம் மனதிற்குள் ஏற்படும் புத்துணர்ச்சியை அவற்றால் மட்டுமேக் கொடுக்க முடியும்.

ரோஜாச் செடி (Rose plant)
செயற்கையாக எத்தனை வகையை உருவாக்கினாலும், இயற்கைக்கு நிகர் இயற்கையே. அந்த வகையில், நம் வீடுகளில் ரோஜாச் செடி வளர்ப்பதை பெரும்பாலும் பார்த்திருக்கிறோம். இருப்பினும், மாடியில் ரோஜாச் செடிகளை வைத்துப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், முறையாகப் பராமரிக்காவிட்டால், செடி கருகிவிடும் என்பதைப்போல, வீட்டின் மேற்கூரைக்கும் பங்கம் வந்துவிடும் இதில்

எனவேக் குறிப்பாக, மாடித் தோட்டத்தில் ரோஜாச் செடி வளர்க்கும்போது, ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களைக் கவனம் எடுத்துக் கொண்டால் போதும்.செடியும் நன்றாக வளரும் பூக்களும் அதிகளவில் பூத்துக் குலுங்கும் எனவே

தண்ணீர் (Water)
பொதுவாக மாடியில் தொட்டியில் செடி வைத்திருந்தால், அடிக்கடி தண்ணீர் ஊற்றக்கூடாது. மூன்று நாளைக்கு ஒரு தடவையோ அல்லது நாலு நாளுக்கு ஒரு தடவையோ டம்ளர் அளவுக்குத் தண்ணீர் விட்டால் போதுமானது.

தினமும் ஒருவேளைத் தண்ணீர் விடவேண்டும் என்று நினைத்தால், காலை வேளையில் டம்ளரில் அரை டம்ளர் தண்ணீரை ரோஜாச் செடிக்கு ஊற்றலாம்.
இருப்பினும், மாலைவேளையில் செய்யக்கூடாது. ஏனெனில் காலை வேளையில் நீர் கொடுக்கும்போது செடி நீரை எடுத்துக்கொண்டது போக எஞ்சியவை ஆவியாகிப் போய்விடும்.

டிரைக்கோடெர்மா விரிடி
பூஞ்சைத் தொற்று மற்றும் செடிகளில் இருந்து இலைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடியைப் பயன்படுத்தலாம்.

இதில் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 20 கிராம் என்ற அளவில் 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ தண்ணீரில் கலந்து வேர் பகுதிகளில் ஊற்றி விட வேண்டும்.

அல்லது லிட்டருக்கு 5 மில்லி சூடோமோனஸ் கலந்து செடிகளின் மீதுத் தெளிக்கலாம். இதை மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.

முட்டை ஓடு (egg shell)
வீட்டில் இருக்கும் முட்டை ஓட்டை யோ அல்லது நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் வெங்காயத்தாள்களையோ நீங்கள் தொட்டிகளில் மேலே சிறிதளவு பள்ளம் தோண்டி அதில் போட்டு மூடி விடலாம். இதுச் செடிக்கு நல்ல உரமாக இருக்கும் எனவே

சாம்பல் (Ash)
வீட்டில் இருக்கிற சாம்பல் அல்லது செங்கல் சூளையில் இருந்து கிடைக்கும் சாம்பலைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தொட்டிச்செடி ஒரு அஞ்சு விரல் அளவு சாம்பல் தேவைப்படும் அதாவது ஒரு 30 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். அந்த சாம்பலை நீங்கள் எப்போது நீர் விடுக்கிறீர்களோ அந்த நீர் கொடுப்பதற்கு முன்னாடி தொட்டியில் போட்டுவிட்டு, அதன்பிறகு தண்ணீர் விடலாம்.

மழைக்காலங்களில் தொட்டி செடிகளுக்கு அதிக பூஞ்சைத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு காதி சோப்பை 10 கிராமை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறைத் தெளிக்கலாம் இதில்

பாஸ்போபாக்டீரியா (Phosphobacteria)
பாஸ்போபாக்டீரியா கடையில் கிடைக்கும். அதனைப் பவுடராகவோ அல்லது திரவமாகவோ வாங்கி ஒரு தொட்டிச் செடிக்கு 20 கிராம் என்கிற அளவில் நீரில் கலந்து வேரில் ஊற்ற வேண்டும். இதைச் சீரான இடைவெளியில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories