#மல்லிகை சாகுபடி குறிப்புகள்

#மல்லிகை சாகுபடி குறிப்புகள்
ரகம் – செடிமல்லி, கொடிமல்லி.
பட்டம் – புரட்டாசி.
பதியன் எண்ணிக்கை – 500 பதியன்கள் / ஒரு ஏக்கர்.
நிலம் தயாரித்தல்
நன்கு புழுதிபட 3 முதல் 4 உழவு போடவேண்டும். வயலில் கட்டிகள் மற்றும் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்
அடியுரம்
தொழுஉரமாக 5 கிலோ, கடலைப்புண்ணாக்கு 250 கிராம் என்ற அளவில் கலந்து ஒரு செடிக்கு 200 கிராம் என்ற விகிதத்தில் செடியை சுற்றி லேசாக குழி பறித்து அவற்றில் போட்டு மண்ணால் மூடி விட வேண்டும்.
பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 5 அடி, செடிக்கு செடி 5 அடி.
களை நிர்வாகம்
சிறிய செடியாக இருக்கும்போது மாதத்திற்கு 2 களைகளும், பெரிய செடியாக ஆகிவிட்டால் மாதத்திற்கு ஒரு களையும் வெட்ட வேண்டும்.
நீர் நிர்வாகம்
10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை)
உரநிர்வாகம்
ஒரு ஏக்கருக்கு 100 கிலோ கடலை புண்ணாக்கு தேவைப்படும்
வைக்கும் முறை செடிக்கு அரை அடி தள்ளி குழி எடுத்து ஒரு செடிக்கு ஒரு கை அளவு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மேலுரம்
காம்ப்ளக்ஸ் 50 கிலோவும், கடலைப்புண்ணாக்கு 50 கிலோவும் கலந்து செடிக்கு அரை அடி தள்ளி குழி எடுத்து ஒரு கை அளவு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2 மாதத்திற்கு ஒரு முறை இவ்வாறு போட வேண்டும்
பெரிய செடியாக இருந்தால் 100 கிராம் கடலை புண்ணாக்கு, 100 கிராம் காம்ப்ளக்ஸ், 100 கிராம் டி.ஏ.பி. மூன்றையும்; கலந்து செடியைச் சுற்றி குழி வெட்டி உரத்தை தூவிவிட்டு மண்ணால் மூடவேண்டும்.
செல் அறிகுறி
செல் விழுந்தவுடன் செடி வெண்மையாகிவிடும். செடியைத் தட்டினால் செல் பறக்கும். பிறகு இலை அனைத்தும் கொட்டிவிடும்.
கட்டுப்படுத்தும்முறை
இயற்கை முறையில் மஞ்சள் அட்டையில் கிரீஸ் அல்லது விளக்கெண்ணை தடவி வைக்கலாம் அல்லது மஞ்சள் அட்டை ஒன்றின் விலை ரூபாய் 35 வாங்கி அவற்றை வாங்கி ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வயலில் ஆங்காங்கே வைத்து கட்டுப்படுத்தலாம்
இரசாயன முறையில் கெல்த்தேன் ஓரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி கலந்து அடிக்க வேண்டும்.
பச்சைப்புழு அறிகுறி
மழை மற்றும் பனி காலத்தில் பச்சைபுழு மல்லிகை பூச்செடியை தாக்கும். பூவிற்குள் சிறிய புழுவாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
இயற்கை முறையில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சம அளவு எடுத்து அரைத்து அவற்றில் சாறு எடுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இரசாயன முறையில்
எமாமேக்டின் 10 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பெர்மெத்திரின் 25மில்லி கலந்து தெளித்து அடிக்கலாம் அல்லது
குளோரிபைரிப்பாஸ் ஒருலிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி மருந்து தெளிக்க வேண்டும்.
மஞ்சள் முரளை அறிகுறி
பூ சிறுத்து மஞ்சள் நிறத்தில் காணப்படும். பூவின் காம்பும் சிறுத்து காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை
மெத்தலோ பாக்டிரியா 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் இவை இயற்கை முறையாகும் மஞ்சள் முரளை வராது தொடர்ந்து மூன்று முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம்
இரசாயன முறையில் அசிபேட் பவுடர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு
வெயில் காலங்களில் பூ அறுவடை முடிந்தவுடன் செடியின் கிளைகளை வெட்டி கவாத்து செய்து, செடியின் கிளைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டி விட வேண்டும்.
பிறகு 20 நாள் கழித்து நீர்ப் பாய்ச்சி கட்டினை அவிழ்த்துவிட வேண்டும்.
அல்லது ஆடுகளை விட்டு செடியை திங்கவிட வேண்டும்
இலைகள் அனைத்தையும் தின்றுவிடும் பிறகு தண்ணீர் பாய்சினால் செடி குப்பென்று நன்றாக தழையும்.
கொழுந்தாக கொழுகொழுவென்று ஓடும் தண்ணடுகளை அப்புறப்படுத்தவும் அவை சோத்துக்கிளை எனப்படும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories