பருவம்
ஜூன்- நவம்பர் மாதம் மல்லிகை நடவுக்கு ஏற்ற பருவமாகும்.
மண்
செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 8 வரை இருக்க வேண்டும்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும். பிறகு 30 சென்டிமீட்டர் நீளம் அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை 1.25 மீட்டர் இடைவெளியில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும் தொழுவுரம் இட்டு ஆறப்போட வேண்டும்.
விதை அளவு
ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய6400 பதியன்கள் அல்லது வேர்விட்ட குச்சிகள் தேவைப்படும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளின் மத்தியில் பத்தியன்களை விட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும்.
நீர் நிர்வாகம்
மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வேர்பிடித்து நன்கு வளரும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.