மல்லிகையில் சிறந்த மகசூல் பெறுவதில் கவாத்து முக்கிய பங்கு வகிக்கிறது. கவாத்து செய்யும் பொழுது தான் அதிக பக்க கிளைகள் தோன்றி பூக்கள் அதிகமாகும். இத்தகைய கவாத்து முறையை செப்டம்பர் மாதத்திலும் நவம்பர் மாதத்தில் பிரித்து செய்யலாம்.
அதாவது மொத்தம் உள்ள செடிகளின் பாதியளவு செப்டம்பர் மாதமும்,மீதம் உள்ள செடிகளுக்கு நவம்பர் மாதம் கவாத்து செய்யலாம் இதனால் தொடர்ந்து மகசூலை பெற முடியும்.
மஞ்சள் பயிரின் பொருளாதார முக்கியத்துவம் என்ன?
மஞ்சள் ஒரு கிழங்கு வகை நறுமண பயிராகும் இதன் இலை கொத்தாக இருக்கும் மற்றும் இது ஒரு ஆண்டு பயிராகும்.
இது மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் சாய தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
செண்டு மல்லியில் நுனி கருகளை எப்படி தடுக்கலாம்?
இயற்கை பூச்சி விரட்டியை தெளித்து செண்டு மல்லியில் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
தேங்காய் பால் கரைசல் அல்லது மீன் அமிலக் கரைசல் தெளிப்பதால் நல்ல பசுமையான இலைகள் தோன்றும் இதனால் நுனி கருகளையைக் கட்டுப்படுத்தலாம்.
அரப்பு மோர் கரைசலை தெளிப்பதால் என்ன பயன்?
பூ பிடிக்கும் பருவத்தில் அரப்பு மோர் கரைசலை தெளிப்பதால் பயிர் வளர்ச்சியின் வேகம் அதிகரித்து நிறைய பூக்கள் உற்பத்தி ஆகும்.
இந்த கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து அதிக விளைச்சல் மற்றும் மகசூலுக்கு வழிவகை செய்கிறது.
பசுந்தீவன உற்பத்தி செய்வதால் என்ன நன்மை?
பசுந்தீவனத்தை பயிர் செய்வதன் மூலமும் மண்வளம் மண்ணின் நீர் தாங்கும் சக்தி அதிகரிப்பதோடு கலை மற்றும் உபயோகமற்ற கலைகள் மற்றும் பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
பயறு வகை தீவனப் பயிர் வகை தீவனப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மண்ணின் சத்துக்கள் குறிப்பாக தழைச்சத்து பெருகுகிறது மேலும் கால்நடைகளுக்கு தீவனமாகவும் அதிக வருமானம் பெறவும் உதவுகிறது.