ரோஜா செடிகள் எப்போது அதிகமாக பூக்கும்?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் சேதம் என்ன?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5% பறவைகளால் 0.85 சதவீதமும், கதிர் எடுக்கும் இயந்திரங்கள் 1.68 சதவீதமும், போக்குவரத்தின் போது 0. 15 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது.

கடலையில் டிக்காஇலைப்புள்ளியை எப்படி கட்டுப்படுத்தலாம்?

வயலில் களை அதிகம் இல்லாமலும் ,தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏக்கருக்கு 25 கிலோ தொழு உரம் அல்லது 150 கிலோ வேப்பம் புண்ணாக்கை தலா ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி,சூடோமோனாஸ் ப்ளோராசன்ஸ் என்னும் நுண்ணுயிரியுடன் கலந்து வயலில் தூவ வேண்டும்.

காட்டுப்பன்றிகள் வயலுக்குள் வருவதை எப்படி தடுக்கலாம்?

நெல்,சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு, வரப்பின் சுற்றி 4வரிக்கு ஆமணக்கு பயிரிட வேண்டும். ஏனெனில் ஆமணக்கு வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும்.

மேலும் ஆமனக்கில் அதிகளவு ஆல்கலாய்டுகள் இருப்பதால் அவை சுவையின்றி இருப்பதாலும் காட்டுப்பன்றிகளுக்கு பிடிக்காது.

ரோஜா செடிகள் எப்போது அதிகமாக பூக்கும்?

ரோஜா செடிகளை நட்ட முதல் ஆண்டில் இருந்தே பூக்கத் தொடங்கினாலும், இரண்டாம் ஆண்டிலிருந்து தான் அதிக மகசூல் கொடுக்கும்.

கவாத்து செய்த 45 நாள் கழித்து பூக்க ஆரம்பிக்கும் .நன்கு மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்க வேண்டும்.

மாடுகளின் வயிற்றில் புழு இருந்தால் அதை குணப்படுத்த இயற்கை வழி என்ன?

மாடு கன்று குட்டிகள் வயிற்றில் ஏதேனும் புழு இருந்தால் உடனே வேப்பம்புண்ணாக்கு வாங்கி தண்ணீரில் ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுத்தால் சரியாகிவிடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories