ரோஜா இதழ்களை நிழலில் உலர்த்தி நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உண்டுவந்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை மாலை ஆகிய இருவேளை அப்படியே உண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.
புண்கள் குணமாக ரோஜாப்பூ இதழிலிருந்து குடிநீர் செய்து ,பாதிக்கப்பட்ட இடத்தை கழுவ வேண்டும். இந்த நீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
ரோஜா இதழை சேகரித்து அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வர இதயம் வலிமை பெறும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
ரோஜா மலரின் சாற்றை பயன்படுத்தலாம். தலைவலி எந்தப் பக்கம் இருக்கிறதோ அதற்கு நேர் எதிர் நாசி துவாரத்தில் இந்த சாற்றை இரண்டு துளி விட உடனே தலைவலி மறைந்து போகும்.