தென்னை மரத்திற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இதை செய்ய மறந்து விடாதீர்கள்!
ஒரு வருட தென்னங்கன்று களுக்கு வேப்பம் புண்ணாக்கு 2.5 கிலோவும் நடவு செய்த நான்கு வருடங்களுக்கு மேலான தென்னங்கன்று களுக்கு 5 கிலோவும் மரத்தைச் சுற்றி 5 அடி தூரத்தில் மண்ணைக் கிளறி விட வேண்டும்.
ஒரு தென்னை மரத்திற்கு 5 கிலோ மண்புழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கை கலந்தும் வருடத்திற்கு இரண்டு முறை ஆறு மாதத்திற்கு ஒருமுறை இடலாம்.
தேனீ வளர்ப்பில் எ தை கவனிக்க வேண்டும்?
தேனி வளர்ப்பில் தேன் பெட்டிகளை மலர்கள் அதிகமாக நிழல் உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
தேனீ வளர்ப்பு பெட்டியின் அடிபாகத்தில் மெழுகு இருக்கிறதா என்பதை அவ்வப்போது உறுதி செய்வதுடன் இரவில் மட்டும் தேனீப் பெட்டியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
குழிவெடிச்சான் நெல்லின் சிறப்பியல்புகள் என்ன?
பாரம்பரியமான நெல்லான குழிவெடிச்சான் நெல் சாகுபடிக்கு ஜூலை 15 – ஜனவரி 14 வரை ஏற்ற பருவமாகும். நடவு செய்த 110 நாட்களில் 2.5 அடி உயரம் வளர்ந்து அறுவடைக்கு வரும் ஒரு குறுகிய காலப் பயிர்.
உவர் தன்மை, மணல் கலந்த களிமண் நிலத்தில் நன்கு வளரும் .குறிப்பாக கடலோர பகுதிக்கு ஏற்ற சிறந்த ரகமாக விளங்குகின்றது. மேலும் வறட்சி, பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றை எதிர்த்து வளரும் திறன் கொண்டது.
ரோஜா செடி ஏன் சோர்ந்து காணப்படுகிறது. இதற்கு என்ன தீர்வு?
எறும்புகள் செடியின் வேரைக் க டித்துக் செடியை வீணாகிவிடும் என்பதால் செடி இருக்கும் தொட்டியைச் சுற்றி பெருங்காயத்தை தூவி விடவேண்டும்.
வேர் கரையான்,வேர்களை சேதப்படுத்துவதாலும் சோர்வடையும். அதனை தடுக்க வேப்பம் புண்ணாக்கு ,கடலை புண்ணாக்கு இரண்டையும் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலை செடிக்கு ஊற்ற வேண்டும்.
மாடுகள் பால் கறக்கும்போது உதைக்க காரணம் என்ன?
மாடு முதல் முறை கன்று ஈன்றால் கூச்சம் குணத்தால்பால் கறக்க விடாமல் உதைக்கும்.
சில மாடுகள் பிறவிக் குணமாக இருக்கலாம். நாளாக நாளாக இதை சரி செய்து விடலாம்.
பால் கறக்கும் போது ஏதாவது ஒரு வகையில் மாட்டின் நினைவினை திசைதிருப்பி விட்டு பால் கறக்க வேண்டும்.