விவசாயத் தகவல்கள்

 

பருவநிலை மாற்றம்: 2030ஆம் ஆண்டுக்குள் மக்காச்சோளம்விளைச்சல் கடுமையாக பாதிக்கும்.

பருவநிலை மாற்றம் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள் மக்காச்சோள விளைச்சலை கடுமையாக பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

nature food இதைப் பற்றிய கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் சில முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது சோளத்தின் உற்பத்தி 24 விழுக்காடு வரை குறையும் என்றும், கோதுமை உற்பத்தியில் 17 விழுக்காடு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட அமெரிக்கா, கனடா ,வட சீனாவில் சமவெளிகளில் மத்திய ஆசியா மற்றும் பிற பகுதிகளில் வெப்பமயமாதலும் ஏற்ப வளரும் கோதுமை விளைச்சல் அதிகரிப்பினால் இந்த சமநிலையற்ற தன்மை ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரோஜாவில் கரும்புள்ளி நோய் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் ராணி கோட்டை பகுதியில் ரோஜாமலர் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

தற்போது பயிரிட்டுள்ள ரோஜா பெயரில் கரும்புள்ளி நோயின் தாக்கம் தீவிரமாக காணப்படுகிற.து இளம் மற்றும் முதிர்ந்த இலைகளில் கருமையான வட்ட வடிவ புள்ளிகள் தோன்றுவது பிறகு புள்ளிகள் ஒன்றாக சேர்ந்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பிறகு கருதுவது. இதனால் இலைகள் முதிர்ச்சி அடையாமல் விழுந்து விடுதல் இந்த நோயின் அறிகுறியாகும்.

தற்போது நிலவி வரும் குறைந்த பகல் நேர வெப்பநிலை, அதிக மழைப்பொழிவு மற்றும் இரவு நேர பனிப்பொழிவு இந்த நோய் தோன்றுவதற்கும் பரவுவதற்கும் ஏற்ற கால நிலையாக உள்ளது.

அதனால் இந்த நோயை கட்டுப்படுத்த செடிகளுக்கு இடையே போதிய காற்றோட்டம் ஏற்படுத்தி நோய் பரவுவதை தடுக்கலாம்.

மேலாண்மை முறைகள்
பாரம்பரிய ரோஜாக்களை சூரியன் விரைவாக மறைந்து இரவில் பனி படரும்இடங்களில் நடவு செய்ய வேண்டும்.

ரோஜா செடிக்கு போதிய இடைவெளி விடுதல், நடுதல் ,மூலமாக காற்றோட்ட வசதி கிடைக்கும்.

மேல்நிலை நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும் மற்றும் இலைகளை உலர்வாக வைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தண்டு மற்றும் இலைகளை நீக்கி அழித்துவிட வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories