வீட்டில் வளர்க்கும் ரோஜாச் செடிகள் மீது அதிக கவனம் செலுத்தணும். ஏன்?…

வீட்டில் வளர்க்கும் ரோஜாச் செடிகள் மீது அதிக கவனம் செலுத்த சில யோசனைகள்:

ரோஜாச் செடியின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.

உச்சி வெயிலில் ரோஜாச் செடி இருக்கக் கூடாது.

காலை – மாலை இரண்டு வேளையும் ரோஜாச் செடிகளுக்கு அவசியம் தண்ணீர்விடுங்கள்.

மதிய வேளையில் கண்டிப்பாக தண்ணீர் ஊற்றக்கூடாது.

ரோஜாச் செடியின் அகலம் 70 செ.மீ. இருக்க வேண்டும்.
தொட்டியில் சிறுசிறு துளைகள் போட்ட பின் மணல் நிரப்பி ரோஜா செடியை வையுங்கள்.

ரோஜாச் செடிகளின் மேல் தண்ணீர் ஊற்றக்கூடாது. எல்லாத் தண்ணீரிலும் சிறிது உப்பு இருக்கும். அதுபடிந்து இலைகளின் சுவாசத் துளைகளை அடைத்தால் நாளடைவில் செடி பட்டுப்போகும்.

முட்டை ஓடு, பயன்படுத்திய தேயிலை, பூண்டு, வெங்காயச் சருகுகள் போடலாம்; நல்ல பலன் கிடைக்கும்.

ரோஜாச் செடி நிறையப் பூபூக்கள் பூக்க பீட்ரூட்டின் தோலையும், வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.

ரோஜா செடிகளுக்குப் பக்கம் எறும்பு புற்று இருந்தால் அதில் சிறிது பெருங்காயத் தூளை தூவினால் போதும்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories