அதிக அளவில் நோய் தாக்கிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி எரித்து விடவேண்டும் .
நோய் தாக்காத நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
ஸ்டெரெப்டொமிஸின் சல்பேட் என்ற எதிர் உயிர் பொருட்களைத் தெளிக்க வேண்டும்.
வேப்பம் புண்ணாக்கு கரைசலைத் தெளிப்பதன் மூலமும் சொறி நோயைக் கட்டுப்படுத்தலாம்.
தக்காளியை எந்த பட்டத்தில் சாகுபடி செய்யலாம்?
ஏற்ற பட்டத்தில் பயிர் செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஆடிப்பட்டத்தில் தக்காளி சாகுபடி செய்யலாம்.
மேலும் மிளகாய்,சுரை, பூசணி, பாகள், பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை,கொத்தவரை போன்ற காய்கறி வகைகளில் பயிரிடலாம்.
அவரை செடியில் அஸ்வினியை எப்படி கட்டுப்படுத்துவது?
பூச்சித் தாக்குதலைத் தடுக்க கண்டிப்பாக வாரம் ஒருமுறை கற்பூர கரைசல் தெளிக்க வேண்டும். சாம்பல் இருந்தால் அதையும் தூவி விடவேண்டும்.
வேப்பம் புண்ணாக்கு ஒரு மெல்லிய துணியில் கட்டி நீரில் பாதி நாள் ஊற வைத்து அந்த சாற்றை எடுத்து செடிகளில் உள்ள காய்களிலும் பிஞ்சுகளிலும் நன்றாய் படும்படி தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சிவிரட்டி முக்கியத்துவம் என்ன?.
கத்திரி,வெண்டை, தக்காளி ,அவரை ,உள்ளிட்ட காய்கறி செடிகளில் நோய் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று, இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும், இதற்கு மூலிகை பூச்சிவிரட்டி முக்கியமாகும்,
நான்கு மாத சினை மாடு பால் கறக்க விடுவதில்லை என்ன காரணம்?
சில கறவைகளுக்கு ஏழாவது மாதத்தில் பால் கரப்பது நின்றுவிடும். சில கறவைகளுக்கு 4 மாதங்களில் தானாக நின்றுவிடும்.
அப்போது பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும். இதனால் அடுத்த கறவையில் நல்ல பலன் கிடைக்கும். கன்றின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.