கத்திரிக்காய் சொத்தை ஆகிறதா?

 

கைராலிமற்றும் கிராமப்பிரியா கோழி முட்டை இடுவது குறைகிறது. முட்டையிடுவது எப்படி அதிகரிப்பது?

அசோலா கொடுக்கலாம் .மக்காச்சோளம், எள்ளு, புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, தாது உப்பு போன்றவைகளை முட்டையிடும் கோழிகளுக்கு கொடுக்கலாம், மேலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியங்களை உணவாக கொடுப்பதன் மூலம் அதிக முட்டைகள் இடும்.

கால்சியத்தை இயற்கையாக எப்படி கோழிகளுக்கு உணவின் மூலம் கொடுக்கலாம்?
விலை மலிவாக கிடைக்கும் சமயத்தில் காய்கறிகளை வாங்கி நறுக்கிய தீவனமாக கொடுக்கலாம்.

இயற்கையில் கிடைக்கும் கீரை வகைகள் மற்றும் விலை குறைந்து கிடைக்கும் .கீரை வகைகளின் நறுக்கிய தீவனமாகவும் கொடுக்கலாம். அசோலாவை தீவனமாக கொடுக்கலாம்.

தீவனக் கலவையில் கருவாட்டு தூள் கலந்து கொடுப்பதன் மூலம் கால்சியம் சத்து கோழிகளுக்கு கிடைக்கும்.

ஒரு வருடமாக தென்னங்குருத்து அழுகிய நிலையில் உள்ளது .இதற்கு என்ன செய்யலாம்?

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம் அல்லது வேரின் வழியாக கொடுக்கலாம்.

2 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து தொழுவுரத்தை மரத்திற்கு இடவேண்டும்.

தென்னை மரத்தின் அடியில் செண்டுமல்லி நடலாமா?

செண்டு மல்லியை தென்னை மரத்தின் அடியில் நாம் இதன் மூலம் நூற்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

சம்மங்கி செடியில் பூவை ஒரு பொன்நிற வண்டு சேத ம் செய்கிறது. இதற்கு இயற்கை அல்லது செயற்கை முறையில் மருந்து உள்ளதா?

வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்கலாம் அல்லது கற்பூர கரைசல் தெளிக்கலாம்.

விளக்குப்பொறி வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

திணை விதைக்க ஏற்ற பருவம் என்ன?

மானாவாரி ஜூன்- முதல் ஜூலை வரை செப்டம்பர் முதல் அக்டோபர் வரை
இரவை பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்த பருவங்களில் தினை விதிக்கலாம்.

கத்திரிக்காயை சொத்தை ஆவதை குறைக்க இயற்கை வழி என்ன?

வாரம் ஒருமுறை அக்னிஅஸ்திரம் தெளிக்கலாம். வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் காய் சொத்தை ஆவதை குறைக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories