சீத்தாப்பழம் மரத்தில் அதிகமாக மாவுப்பூச்சி உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

நாவல் மரம் எந்த மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது?

நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். அதிக உற்பத்தித் திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதி உள்ள மண் தேவை.

இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்கிறது இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அள்ளிக் கொடுக்கிறது.

நாவல் உப்புத்தன்மை மற்றும் நீர் தேங்கி நிலையிலும் நன்றாக வளரும் .அடர்ந்த மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது லாபகரமாக இருக்காது.

மரங்களில் வைரஸ் நோய் கட்டுப்படுத்துவது எப்படி?

ஒரு லிட்டர் தண்ணீருக்கு டிரைகோடெர்மா விரிடி 5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து நீர் பாசனம் மூலம் விடலாம் அல்லது மரத்தின் மீது தெளித்து விடலாம்.

நடவிற்கு முன் டிரைகோடெர்மா விரிடி கொண்டு கன்றின் வேரையும் அனைத்து பிறகு இதன்மூலம் வைரஸ் நோயை கட்டுப்படுத்தலாம்.

சீத்தாப்பழம் மரத்தில் அதிகமாக மாவுப்பூச்சி உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

20 கிராம் வேப்ப எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் சோப்பு உடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளித்தால் மாவுப் பூச்சித் தாக்குதல் குறையும்.

கம்பு விதைகளை விதை நேர்த்தி செய்வதற்கான எளிய வழிமுறைகள் என்ன?

கம்பு விதைகளை புதினா இலைச்சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் இலைப்புள்ளி நோய் கட்டுப்படும்.

விதைகளை பாலில் ஊறவைத்து விதைத்தால் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கோழிகளுக்கு எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அளிக்கலாம்?

கோழிகளுக்கு பல நுண்ணுயிரிகள் பூசண நச்சு போன்றவற்றால் பல நோய்கள் ஏற்படுகின்றன இதனால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது.

எனவே இதற்கு வேப்பம் பழத்தை காய வைத்து அதனை அரைத்து ஒரு மூட்டை தீவனத்திற்கு 50 கிராம் என்ற அளவில் கலந்து கொடுக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories