தென்னையில் பூச்சி மேலாண்மை

 

இரண்டு வருடம் ஆன தென்னம்பிள்ளை கொழுந்துகளை வண்டு வெட்டுகிறது.தென்னம்பிள்ளை கொழுந்து வாடல் நோய் இருக்கிறது. இதற்கு என்ன மருந்து கொடுக்கலாம்.

பாதிக்கப்பட்ட தென்னையின் அடிப்பாகத்தில் மூடாக்கு முறையைப் பயன்படுத்தி அதன்மேல் நுண்ணுயிர் கலவையை ஊற்ற வேண்டும். அதாவது 30 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் திறன் நுண்ணுயிர் கலந்து ஊற்ற வேண்டும் .ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். இக்கலவையை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதனால் இடுபொருள் செலவு குறையும் மேலும் இதன் மூலம் ஈரப்பதத்தை தக்க வைத்து கலைகளை கட்டுப்படுத்துதல் காய்கறிகளின் நிறம் வடிவம் அளவு மற்றும் சுவை அதிகரிக்கப்படும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை தென்னை மரத்திற்கு தொழு உரத்துடன் உயிரி உரமான சூடோமோனஸ் கலந்து மரத்தைச் சுற்றி இட்டு நீர் பாய்ச்சவேண்டும். மேலும் மரத்தை சுற்றி 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு தண்ணீர் பாய்ச்சலாம். காய்ந்த பாதிக்கப்பட்ட தென்னை மட்டைகளை அகற்றிவிடலாம் .மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேப்பம்புண்ணாக்கு மணல் கலந்து தோகைகளுக்கு இடையில் தெளித்து துவிடலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories