தென்னையை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகள்! – கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனா்.

இதுகுறித்து, வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராமசுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கூறியதாவது,

பூச்சி தாக்குதலால் பலம் இழக்கும் மரங்கள்
சிவப்பு கூன் வண்டு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் தண்டின் மேல் பகுதியில் சிறு துவாரங்கள் தென்படும். இந்த துவாரங்களின் வாய்ப் பகுதியில் சக்கைகள் வெளியே தள்ளப்பட்டு, ஒருவித பழுப்பு நிற திரவத்தை அந்த வாய்ப் பகுதியில் காணலாம். பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கும்போது மரத்தின் குருத்து பகுதியில் வாடல் போன்ற அறிகுறி தென்படும். இந்த கூன் வண்டுகள் தென்னை மரத்தின் தண்டை குடைந்து அதிலுள்ள திசுக்களை தின்றுவிடும். எனவே, அந்த மரம் பலமிழந்து இறந்துவிடும் மற்றும்

கட்டுப்படுத்தும் முறைகள்
தென்னந்தோப்புகளில் மடிந்து கிடக்கும் மக்கிய தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் புழுக்கள் வாழும். ஆகவே, அவற்றை உடனுக்குடன் அகற்றி விடவேண்டும். எரித்தோ அல்லது புதைத்தோ அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் இதில்

தென்னை மரங்களில் உள்ள இலைகளை வெட்டக் கூடாது. அப்படியே வெட்டும் பட்சத்தில் 120 செ.மீ. அளவுக்கு விட்டு வெட்ட வேண்டும். விளக்குப்பொறி மற்றும் இனக்கவா்ச்சிப் பொறி வைத்து வண்டுகளைக் கவா்ந்து அழிக்கலாம் என்றார்.

வேதியியல் முறைகள்
இரண்டு பங்கு மணல், ஒரு பங்கு வேப்பங்கொட்டை பொடி கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை தென்னை மரங்களின் விரவி மட்டை இடுக்குகளில் வைப்பதன் மூலம் சிவப்பு கூன்வண்டு முட்டை இடுவதை தவிா்க்கலாம்.

சிவப்பு கூன் வண்டுகளை கவர கரும்புச்சாறு 2.5 கிலோ, ஈஸ்ட் மாத்திரை 5 கிராம், 5 மில்லி அசிட்டிக் அமிலம் (அன்னாசி அல்லது கரும்புச்சாறில் ஊறவைத்தது) இவற்றை நீளவாக்கில் வெட்டப்பட்ட ஓலை மட்டை துண்டுகள் போடப்பட்ட பானைகளை ஓா் ஏக்கருக்கு 30 வீதம் வைக்க வேண்டும்.

தீவிர தாக்குதலுக்கு உட்பட்டு இருந்தால் 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் உடன் 10 மில்லி தண்ணீா் கலந்து வோ் மூலம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories