தோட்டத்தில் பல வகையான பூச்சிகள் உள்ளன அவற்றில் ஒரு வகையான பூச்சிகள் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இவைகள் நமது உடலில் இரத்தத்தை உறிஞ்சுவது போல செடிகளின் தண்டு இலை இலைகளில் துளையிட்டு சத்துக்களை உறிஞ்சி விடுகின்றன.
வருடம் முழுவதும் நமது தோட்டத்திற்கு அழையாத விருந்தாளியாக வரும்.
பூச்சிகள் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன.
பூச்சிகளும் பப்பாளி, மல்பெரி, மரவள்ளி ,பருத்தி, கொய்யா ,கத்திரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி போன்ற பயர்களை அழிகிறது.
காற்று பறவைகள் விலங்குகள் தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடியது.
பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிற பொருளால் கவரப்பட்டு இருப்பதால் அதனை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு வருடத்தில் இந்த மாவுப்பூச்சியை 15 முறை இனப்பெருக்கம் செய்யக் கூடியது .ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகள் இடும் திறன் படைத்தது. இதனால் இவை அதிக அளவில் பெருகி பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றது.