மரவள்ளியில் வெள்ளை ஈ இலைகளின் அடி ப்பகுதியில் தோன்றும். இதனால் மரவள்ளியில் தேமல் நோய் ஏற்படும்.
வெள்ளை ஈ தாக்கிய இலைகள் முதலில் வெண் புள்ளிகளாக தோன்றி பிறகு அதை ஒன்றாக இணைந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
வேர் அழுகல், வேர்க் கரையான் ,வேர் புழுக்கள் தாக்கத்தில் இருந்து செடிகளை பாதுகாக்க எப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும்?
விதைகளை அல்லது பயிர்களை நடவு செய்வதற்கு முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதற்கு பிஜே அமிர்தகரைசலை பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் 20 லிட்டர் ,பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர் ,சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம், மண் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற வைக்க வேண்டும்.
இந்த கரைசலில் விதைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விதைக்க வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்கு நனைத்து நடவு செய்ய வேண்டும்.
நிலக்கடலை பயிரில் நோய் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
நிலக்கடலை பயிரில் நோய் தாக்காமல் இருக்க விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
ஓலைப் பாய் அல்லது சணல் சாக்கு நிழலில் விரித்து அதில் 40 கிலோ விதை கடலையை பரப்பி அதன் மீது இரண்டு லிட்டர் பஞ்சகாவ்யாவை தெளித்து புரட்டிவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும் .இதனால் வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது.
அகத்திக்கீரையை எப்போது அறுவடை செய்யலாம்? அதிக கீரைகளை பெற என்ன செய்ய வேண்டும்?
அகத்திக்கீரை நடவு செய்து 25 முதல் 30 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும்.
அகத்திக்கீரையை மேல்மட்டத்தில் வெட்டி அறுவடை செய்தால் அதிக கீரைகள் கிடைக்காது பக்கவாட்டுக் கிளைகளை அறுவடை செய்வதன் மூலம் தொடர்ச்சியாக கீரைகள் பெறலாம்.
கருவுறுதலுக்கு முன் தவிர்க்க வேண்டியவை செயல் என்ன ?
கறவை மாடுகளை கரு உடலுக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக மாடுகளை அடித்து ,உதைத்து ,துன்புறுத்துவதை கூடாது மற்றும் அதிக பயத்திற்கு உட்படுத்தி கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கொண்டுசெல்லப்படும் கறவை மாடுகளில் அட்ரினலின் எனப்படும் கன நீர் சுரந்தது கருப்பையின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்துவிடும்.
இதன் காரணமாக பிட்யூட்டரி எனப்படும் நாளமில்லா சுரப்பியும் கணநீரான ஆக்ஸிடோசின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையை அடைவது தடைபட்டு ,கருவூட்டல் நிகழவும் தடைபடும்.