மாமர எறும்பா? என்ன செய்யலாம்…..

சிகப்பு அரும்புபோல் முசிறு (எறும்பு) மா,எலுமிச்சை மற்றும் எல்லா மரத்திலும் அதிகமாக உள்ளது மேலும் எறும்பு அரிப்பதால் இலை சுருண்டுவிடுகிறது மேலும் எறும்பு மரத்தில் கூடு கட்டிவிடுகிறது . அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மாமரத்தில் எறும்பு அதிகம் உள்ளதால் தேனீக்கள் மரத்திற்கு செல்லாமல் இருக்கும் எனவே மகரந்தச்சேர்க்கை நடைபெறாது. ஆகையால் பூக்கள் உதிர ஆரம்பிக்கும். மரத்தில் எறும்பை கட்டுப்படுத்த டைக்ளோரோ வாஸ் (நுவான்) என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தூர் முதல் இலைகள் நனையும் அளவுக்கு தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். (ராக்கர் தெளிப்பான் கொண்டு தெளிப்பது நல்லது). ஒரு மரத்திற்கு குறைந்தது 20 லிட்டர் தண்ணீரில் 40 மில்லி நுவான் கலந்து தெளிக்க வேண்டும். நுவான் மருந்து கிடைக்காவிட்டல் குளோரோபைரிபாஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories