வெள்ளைக் ஈக்கள் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. இந்த வெள்ளை ஈக்கள் வேகமாக பறக்காது. இதன் வாழ்க்கை பருவம் ஏறக்குறைய முப்பது நாட்கலில் நிறைவடையும்.
பெண் பூச்சிகளின் முன் இறக்கைகள் மீது கருப்பு நிற வட்டம் இருப்பதை வைத்து இந்த பூச்சியை அடையாளம் காணலாம்.
வெள்ளை ஈ தாக்குதல் குறிப்பாக வறட்சி மற்றும் காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ள காலங்களில் அதிகமாக காணப்படுகிறது.
அறிகுறிகள்:
வெள்ளை ஈ தாக்குதல் தென்னையில்அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் இந்த பூச்சி பனை, மா ,வாழை ,புங்கம், கொய்யா ,எலுமிச்சை, சப்போட்டா, வெண்டை ,செம்பருத்தி போன்றவற்றையும் தாக்குகின்றன.
இலைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் மற்றும் ஓலைகளில் கருப்பு பூன்சானம் இருப்பது வெள்ளை தாக்குதலின் அறிகுறியாகும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிறத்திலான ஒட்டுப் பொறிகளையும் ஏக்கருக்கு பத்து என்ற எண்ணிக்கையில் ஆறு அடி உயரத்தில் தோப்பில் தொங்கவிட வேண்டும்
கிரைசோபிர்லா இரை விழுங்கிகள் ,வெள்ளை ஈக்களின் எல்லாம் வளர்ச்சி நிலைகளையும் நன்றாக உட்கொள்வதால் எக்டருக்கு 1000 எண்ணிக்கையில் இந்த இறை விழுங்கிகளை விட வேண்டும்
காக்ஸ் னேநெல்லிட் பொறி வண்டுகள் என்காசியா ஒட்டுன்னிகள் ஆகியவை வெள்ளை ஈக்களுக்கு இயற்கை எதிரிகள் ஆகும். இவற்றை வெள்ளை ஈ தாக்குதல் அதிகமுள்ள ஓலைகளில் வைக்கவேண்டும்.
அதிக பாதிப்பு காணப்பட்டால் ஒரு லிட்டர் நீரில் 5 மில்லி வேப்ப எண்ணெய் ஒட்டு திரவம் அல்லது சோப்புடன் கலந்து தெளிக்க வேண்டும்.
கரும்பூஞ்சணம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த மைதா, ஸ்டார்ச் ,அரிசி கஞ்சி கரைசலில் ஏதேனும் ஒன்றை (ஒரு லிட்டர் கரைசலுக்கு 10 கிராம் )ஓலைகளில் படுமாறு தெளிக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லிகளால் நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றது. வெள்ளை ஈக்களை அழிக்கும் இயற்கை எதிரிகளை அதிகரிக்க பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.