வேலியில் முளைக்கும் துளசியும் விளைப்பொருளாகிறது

வேலியில் முளைக்கும் துளசியும் விளைப்பொருளாகிறது
பொதுவாக துளசி மூலிகை மருந்தாகத்தான் பயன்படுத்தி வந்தோம் பிறகு அவற்றை பூவுடன் சேர்த்து மாலைகட்டி இறைவனுக்கு பயன்படுத்தி வந்தோம் நாளாக நாளாக துளசியின்; தேவை அதிகரிக்க ஆரம்பித்தது அப்பொழுது துளசி கிடைப்பது அரியதாக இருக்கும், இந்த சமயத்தை பயன்படுத்தி ஒருசில விவசாயிகள் துளசி சாகுபடி செய்ய ஆரம்பித்தனர். அவ்வாறு சாகுபடி செய்த திருமதி சரஸ்வதி என்ற பெண் விவசாயின் கருத்துக்களை இப்போ பார்க்கலாம்.
நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பு கொடிவகை பயிர்கள் சாகுபடி செய்து வந்தோம் அவற்றிற்கு உரம் போடுவது, மருந்து அடிப்பது மற்றும் வேலை செய்ய கூலி என்று பார்க்கும்போது செலவு அதிகமாகும்
அவ்வாறு செலவு செய்து காய் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் அங்கு விலை இல்லாமல் போகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது இவற்றையெல்லாம் பார்த்து விட்டு செலவு குறைவாகவும் அதிக வருமானம் தரக்கூடியவையாகவும் என்னா பயிர் சாகுபடி செய்யலாம் என்று இருந்தபொழுது துளசி சாகுபடி செய்தால் 60 நாட்களிலேயே மகசூல் கொடுக்கும் நல்ல விலை கிடைக்கும் செலவும் குறையும் என்று தெரிந்து கொண்டேன்.
எனவே துளசி விதை வாங்கி வந்து நாற்றுப் போட்டு நடவு செய்வது என்று முடிவெடுத்தேன். அதன் அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு அரை கிலோ விதையை வாங்கி வந்து வயலை நன்றாக கொத்திவிட்டு பிளாஸ்டிக் சாமான்;கள், கல், களை மற்றும் கட்டிகள்; இல்லாமல் எடுத்துவிட்டு 10 அடி நீளம், 3 அடி அகலம் உள்ள பாத்தி அமைத்து அதில் விதையை தூவி மண்ணால் மூடிவிட்டு பூ வாளியில் தண்ணீர் தெளித்து வந்தேன்.
30 நாட்களில் நாற்று வளர்ந்து விடும். வயலில் தயாராக வெங்காயம் நடவு செய்ய பார்கட்டி வைப்பதுபோல பார்கட்டி அதில் வரிசைக்கு வரிசை 1 அடி செடிக்கு செடி அரையடி இடைவெளி விட்டு நாற்றை எடுத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்சிவிட்டேன்
பிறகு அடியுரமாக மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 100 கிலோவில் அசோஸ்பைரில்லம் 2கிலோ, பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ சூடோமோனஸ் 2 கிலோவை எருவில் கொட்டி நன்றாக கலந்து அடியுரமாக வயலில் தண்ணிர் பாய்ச்சி விட்டு போட்டேன். பிறகு 60 நாட்களில் அறுவடைக்கு வந்து விட்டது.
அவற்றை அரிவால் கொண்டு அறுவடை செய்து முடி முடியாக கட்டி சாக்கில் போட்டு கட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம் ஒரு மூடி குறைந்தது 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். தொடர்ந்து துளசியை அறுவடை செய்துவிட்டு திரும்ப இரண்டு மாதத்தில் அவை வளர்ந்து விடும். இவ்வாறு நாம் தொடர்ந்து மூன்று வருடம் வரை அறுவடை செய்து கொள்ளலாம்.
நாம தகுந்த பருவத்தில் அறுவடை செய்து விடனும் இல்லாவிட்டால் பூ வைத்துவிடும் நாம திரும்ப அந்த பூவை ஒடித்துவிட்டு அதன்பிறகு அறுவடை செய்யனும் இவை நமக்கு நல்ல லாபம்தான் செலவு அதிகம் வராது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories