உங்கள் மண்ணில் பொன் விளையுமா? விளையாதா? எப்படி கண்டுபிடிப்பது?…

உங்கள் நிலத்தின் மண் நல்ல மண்ணா? கெட்ட மண்ணா? கண்டுபிடிக்க ஆராய்ச்சி நிலையத்துக்கெல்லாம் ஓடியாடி பணத்தைச் செலவழிக்கணும்கிறதுக்கு அவசியமே இல்ல.

அதுக்கு சுலபமான ஒரு வழி இருக்கு. முதல்ல ஒரு பாத்திரத்துல பசுஞ்சாணம், இன்னொரு பாத்திரத்துல குறிப்பிட்ட நிலத்தோட மண்ணுனு தனித்தனியா கரைச்சிக்கோங்க. இது தண்ணியா இருக்கணும்கிற அவசியமில்ல.

முதல்ல சாணக் கரைசல்ல உங்க முழங்கை வரைக்கும் நனைச்சுக்கோங்க. பிறகு, நிழலான இடத்துல போய் நில்லுங்க. கையில ஒட்டியிருக்கற சாணக் கரைசல் உலர்ந்ததும், தண்ணி ஊத்தி கையைக் கழுவிடுங்க.

இப்ப கையை முகர்ந்து பார்த்தா, சாண வாசம் வீசும். அடுத்து, அதே கையில மண் கரைசலை எடுத்துப் பூசிவிடுங்க. இது உலர்றதுக்கு கால் மணிநேரம் ஆகும். அதுக்குப் பிறகு தண்ணியை ஊத்தி, கையைக் கழுவுங்க.

இப்போ கையில சாண வாசம் அடிச்சா… மண்ணுல நல்லது செய்யற நுண்ணுயிரிங்க இல்லனு அர்த்தம். அதேசமயம், மண்வாசனை வீசினா… உசத்தியான மண்ணுனு அர்த்தம். அதாவது, மண்ணுல இருக்கிற நுண்ணுயிரிங்க, சாணக்கரைசல் மூலமா உங்க கையில ஒட்டியிருந்த நுண்ணுயிரிங்களைத் தின்னுடும். அதனாலதான் சாண வாசம் போய், மண்ணு வாசம் வீசும்.

இப்படி சோதிச்சி பார்த்தாலே போதும் உங்கள் மண்ணுல பொன்னு விளையுமா? இல்லையானு? தெரிஞ்சுக்கலாம்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories