உவர்நிலம் ஏற்படக் காரணம்
மண்ணில் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புக்கள் இருப்பதால் உவர் நிலம் ஏற்படுகிறது. இந்த நிலங்களில் பயிர் விதைகள் முளைக்க முடியாமல் போய்விடுகிறது.
நீரில் கலந்துள்ள உப்புகளின் அதிக அடர்த்தியாக இருப்பதால் பயிர்களின் வேர்கள் ஆல் நீரை ஈர்க்க வலுவில்லாமல்இறுதியில் பயிர் வாடி விடுகிறது. அவை மண்ணில் உள்ள மற்றும் பாசன நீரில் உள்ள உப்புகளால் ஏற்படுகிறது.
வயலை சமன் செய்து பிறகு நல்ல வரப்புகள் அமைத்து நீர் பாய்ச்சி தேக்கி பிறகு உழவு செய்வதால் நீரில் உப்புகள் கரைந்து விடும். இந்த நீரை வடிகால் மூலம் வெளியேற்ற வேண்டும். இதுபோல பல முறை செய்வதால் உவர் நிலம் நல்ல நிலமாக மாறும்.
மண்ணில் உள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது.
மாசடைந்த உவர் நிலத்தில் இருந்து உப்புத்தன்மையை உறிஞ்சி எடுத்து அந்த நிலத்தை விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றும் அபூர்வ தாவரத்தை பயிரிடும் மாற்றலாம்.
உ வர்நிலத்தின் தன்மையை மாற்றும் தாவரத்தை பற்றி இங்கு காணலாம்.
வரட்சி பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மாற்று வழிகளில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நச்சு கழிவுகளால் நிலத்தில் ஏற்படும் உப்புத்தன்மையை இயற்கை முறையில் அகற்றி மண்ணை வளமாக்க கூடிய தாவரத்தை பயிரிடலாம்.
வழவழப்பான தடித்த இலைகள் ஊதா நிற பூக்களைக் கொண்டு தரையோடு ஒட்டி வளரும் ஓர்பூடு என்னும் தாவரத்தை சில வீடுகளில் அலங்காரத்திற்காக வளர் ப்பதைப் பார்த்திருக்கலாம்.
ஓர்பூடு தாவரவியல் பெயர் சேசுவியம் போர்டுல காஸ்ட்ரம்.
ஒரு அழகு தாவர மட்டுமல்ல வேறு பல குணாதிசயங்களையும் கொண்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவனமாக புற்று நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட மருத்துவ மூலப்பொருளாக குறிப்பாக மண்ணில் உள்ள சோடியம் உப்பை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வ தாவரம் இது.
இயற்கையாக வளரும் இந்த தாவரத்தின் மூலம் உப்பு படிந்து மலடாகி கிடைக்கும் நிலத்தை பைசா செலவில்லாமல் வளமிக்க மாநிலமாக மாற்ற முடியும் என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியது.
கடற்கரை ஓரங்களிலும் உவர் நிலங்களிலும் ஓர்பூடு என்ற தாவரம் அதிகமாக வளர்கிறது. இது அந்தச் சூழலில் செழித்து வளர்வதற்கு தேவையான சத்துக்களை உவர் நிலத்தில் இருந்தே பெறுகிறது.
இவ்வாறு இயற்கை முறையில் கலர்நிலத்தை மாற்றியமைக்கும் தாவரங்கள் பல உள்ளன. அவற்றை பயிரிட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம்.