கரிசல் மண்ணின் இயல்புநிலை என்ன?

கரிசல் மண்ணின் கீழ்ப்பகுதியில் வடிகால் வசதி குறைவாக இருப்பதால் உப்புத் தன்மை அதிகமாகி பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும்.

கோடைகாலங்களில் உப்புகள் மண்ணின் மேற்பரப்பில் படியும் இதனால் ஆழமான வேர்கள் உடைய பெயர்களும் குட்டையான வே ர்களுடைய பயிர்களும் பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்க நீர் பராமரிப்பு முறைகள் கையாள வேண்டும் இப்பகுதிகளில் அதிகமாக இருப்பதால் ஊட்டச்சத்து சேர்த்து வைக்கும் திறன் அதிகமாக இருக்கும்.

வாழையில் இளம் குலைகளை எப்படி பராமரிக்க வேண்டும்?

வாழையில் இளம் குலைகளை சூரிய வெளிச்சம் மற்றும் காற்று புகும் படியும் மற்றும் ஈரமான வானிலை போது பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றவும் வேண்டும் தண்டுகளில் பாலிதீன் முறை கொண்டு சுற்றி கட்ட வேண்டும்.

பழங்கள் தோன்றிய பிறகு உடனடியாக யோனி மற்றும் அல்லிகளை நீக்க வேண்டும் யோனியில் கொத்து வெளிவந்தவுடன் 8 முதல் 11 நாட்களுக்குப் பிறகு நிற்கவேண்டும்.

கரும்புத் தோகையில் எருவில் என்னென்ன சத்துக்கள் உள்ளது?

இந்த உரத்தில் 1.8 சதம் தழைச் சத்து 1.o சதம் மணிச் சத்து o.o3 சதம் சாம்பல் சத்தும் 1.2o சதம் சுண்ணாம்பு சத்து மற்றும் நுண்ணூட்டங்கள் அடங்கியுள்ளன.

இந்த கரும்பு தோகையை பயன்படுத்தும்போது சுண்ணாம்பு மக்னீசியம் கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு மாங்கனீசு துத்தநாகம் தாமிரம் போறான் மற்றும் மாலிடினம் போன்றவற்றில் குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது.

கோவகாய்கள் எத்தனை நாட்கள் அறுவடைக்கு வரும்?

கோவக்காய் துரிதமாக படர்ந்து வளரக்கூடிய பல்லாண்டு பயிராகும் ஆண்டு முழுவதும் விளைச்சலைத் தரக்கூடியது மேலும் குளிர் அதிகம் உள்ள பகுதிகளில் நன்கு வளரும்.

நன்கு படித்த வெட்டு குச்சிகளை எடுத்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும் செடி நட்ட 50 முதல் 60 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.

மாட்டிற்கு மூக்கில் தண்ணீர் மாதிரி வருகிறது என்ன செய்யலாம்?

மஞ்சள் ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் துளசி இலை ஒரு கைப்பிடி முருங்கை இலை ஒரு கைப்பிடி வேப்பிலை ஒரு கைப்பிடி ஆடாதோடா ஒரு இலை தூதுவளை ஒரு இலை ஓமவல்லி 1 இலை ஆகிய பொருட்களோடு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து மாடுகளை சாப்பிட வைக்க வேண்டும் ஒரு நாளைக்கு ஒரு வேளை என 2 நாட்கள் கொடுக்க வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories