நிலத்தைப் பண்படுத்துதலில் இவ்வளவு உத்திகள் இருக்கு…

1.. பழமையான உழவு முறை / தொன்று கால உழவு முறையில் அதிக சக்தி செலவிடப்படுகிறது. மேலும் மண் கட்டமைப்பு மாறுபட வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

2…பல்வேறு புதிய முறைகளான மிகக் குறைந்த உழவு, சுழி உழவு, தாள் போர்வை உழவு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3.. மிகவும் உயர்ந்து வரும் (கச்சா) எண்ணெய் விலையினால், குறைந்த உழவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்சனைகளும் காரணம். தொடர்ந்து, அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும் மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.

4.. நடவு செய்யப்படும் பகுதி (சால் பகுதி) மற்றும் நீர் மேலாண்மை பகுதி (கால்களுக்கு இடைப்பட்ட பகுதி) களுக்கான தேவை மாறுபட்டது. நடவு செய்யப்படும் பகுதியில் உண்டாக்கப்படும் பண்பட்ட புழுதிக்கு உதவுகிறது.

5.. சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில், இரண்டாம் உழவு செய்யப்படுவது இல்லை மற்றும் கரடு முரடான மண் கட்டமைப்பு கொண்டதாக இருப்பதால் குறைவான களை வளர்ச்சிக் கொண்டதாகவும், அதிக நீர் வடிகால் கொண்டதாகவும், அதிக நீர் வடிகால் கொண்டதாகவும் இருக்கும். உழவின் முதன்மை குறிக்கோள், களைகளை கட்டுப்படுத்துவதும் ஆகும். களைகளை, களைக்கொல்லி கொண்டும் கட்டுப்படுத்தலாம்.

6.. மட்கு மற்றும் தாவரக் கழிவுகளைக் கொண்ட மேல் மண்ணை புரட்டுவதே முக்கிய குறிக்கோளாக, உழவு கொண்டிருந்தது. ஆனால் நவீன வேளாண் முறையில் கால்நடை மற்றம் பசுந்தாள் உரத்தைப் பயன்படுத்துவது குறைந்து விட்டதால் மேல் கூறப்பட்டது முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

7.. பொதுவாக தாவரக்கழிவுகள், மண் மேற்பரப்பில் பசுந்தாள் போர்வையாக இடுவதால் ஆவியாதல் மற்றும் மண் அரிப்பை கட்டுப்படுத்தும். ஆய்வின் அடிப்படையில், தொடர் உழவு பல தடவை தீமையாகவும், ஒரு சில சமயம் நன்மை பயக்கக்கூடியதாகவும் அமைகிறது.

8.. இத்தகைய காரணங்களினால் மிகக் குறைந்த உழவு, சுழி உழவு மற்றும் பசுந்தாள் போர்வை இடுவது உழவு போன்ற புதிய முன்னேற்ற உழவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories