நில த்தில் பூச்சி மருந்துகள் ரசாயன உரம் தெளிப்பதால் ரசாயனங்கள் தெளிப்பதால் அதன் இயல்பான தன்மையை இழந்து விடுகிறது.
மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அளவிற்கு அதிகமாக செ யற்கை உரங்களை பயன்படுத்தினால் மண்ணின் இயல்பு தன்மையை பாதிப்படைந்து மகசூல் குறைந்து விடுகிறது அதைப் பற்றி இங்கு காணலாம்.
பயிர்கள் முளைக்காமல் இருப்பதற்கு மண் கூட காரணமாக இருக்கலாம்.
மண் சில தன்மைகளை கொண்டிருந்தால் தான் பயிர்களின் வளர்ச்சியில் பாதிப்பே இருக்காது.
மண்ணானது ந ல்ல பொலபொலப்பு தன்மையுடன் இருக்க வேண்டும் மண்ணில் உரங்கள் இருக்க வேண்டும் அதாவது மண்புழு கரையான் போன்ற உயிரினங்கள் அதிக அளவில் மண்ணில் இருக்க வேண்டும் மண்ணில் இருக்கும் உயிரினங்கள் மக்கும் பொருளை சேர்ப்பதால் கிடைக்கும் வேதிப்பொருள்கள் இருக்கவேண்டும் மேற்கூறிய மூன்று இருந்தால் மட்டுமே அது விவசாயத்திற்கு ஏற்ற தரமான மண்ணாகும்.
குப்பைகளையும் அடிக்கடி சேர்க்க வேண்டும் சரியான சமயத்தில் உழவு செய்ய வேண்டும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் இதை எல்லாம் சரியாக பயன்படுத்தினாலே மண் வளமானதாக மாறிவிடும்.