மண்ணின் குணாதிசயங்கள்

 

மண் என்பது எண்ணிலடங்கா வேறுபாடுகளை தன்னகத்தே கொண்ட ஒன்று. தோன்றுவதற்கு அடிப்படைக் காரணிகள் இருந்தாலும் ஒன்றாக பலதரப்பட்ட மண்வகைகள் தோன்றுவது விந்தையிலும் விந்தை.

ஒரு இடத்தில் அமையப் பெறும் என்பதை அந்த இடத்தில் உள்ள புவியியல் தன்மை தாய் பாறைகளின் குணங்கள் அங்கு பரவலாக காணப்படும் தாவரங்களின் வகைகள் மற்றும் தட்பவெப்ப ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.

ஒவ்வொரு மண் வகையும் தனக்கே உரியதான தோற்றம் ,பௌதிகத் தன்மை மற்றும் இரசாயன குணங்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.

நிறத்தை வைத்து மண்ணை செம்மண் மற்றும் கரிசல் மண் என்றும் வகைப்படுத்தலாம். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் ஒரே நிறத்தில் இருக்கும் இந்த வகைகளை சில பகுதிகள் அல்லது ரசாயன குணங்களை கொண்டு தான் வேறு படுத்த இயலும். களிமண், வண்டல் மண் குறு மணல் மற்றும் பெருமணல் ஆகியவையும்மண்ணின் மிக முக்கிய பொருட்கள் ஆகும்.

கரிசல் மண்ணில் களி பகுதி சராசரியாக 50 சதம் இருக்கும் .சில இடங்களில் 75 சதம் வரை காணப்படும். மேற்கூறிய பொருட்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்தே ஒரு மண்ணின் குணாதிசயங்கள் அமைகின்றன.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories