மண்ணின் தன்மைக்கு ஏற்ற தீவனங்கள்

 

 

விவசாயிகள் பலரும் கால்நடை வளர்ப்பதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர் .அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது தீவனம் தான். அந்த வகையில் விவசாயிகளிடம் உள்ள நிலத்தில் எந்த மண்ணிற்கு எந்த வகை தீவனங்கள் வளர்க்கலாம் என்பது பற்றி இங்கு காணலாம்.

களர் மற்றும் உவர் நிலம்

கினியா புல், வேலி மசால் ,நீர் புல், தட்டைப் பயிறு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். இவ்வாறு சாகுபடி செய்யும் தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
அமில நிலம்

முயல் மசால் ,தட்டைப் பயிறு, கினியா புல் போன்ற பயிர்களை அமில நிலத்தில் சாகுபடி செய்வது சிறந்ததாகும். இந்த வகை தீவனங்களை அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

தரிசு நிலம் மற்றும் வரப்பு ஓரங்கல் :

இந்த வகை நிலத்தில் சுபா புல் ,அகத்தி ,கிளைரிசிடியா போன்ற தீவனப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.

தண்ணீர் தேங்கிய நிலம்:

தண்ணீர் தேங்கிய நிலமாக இருந்தால் நீர்புல் , அசோலா போன்ற தீவனங்களை வளர்க்கலாம். இதை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம்.

நிழலில் வளரக்கூடியவை

கினியா புல், டெஸ்மோடியம் ஆகிய தீவனங்கள் நிழலில் உலர கூடியவையாகும். இதை அறுவடை செய்து கறவை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.

இவ்வாறு மண்ணிற்கு ஏற்ற தீவனங்களை விவசாயிகள் சாகுபடி செய்து கால்நடைகளுக்கு தீவனமாக அளித்தால் பால்வளம் குறையும். மாடுகள் மிக ஆரோக்கியத்துடனும் காணப்படும். இதனால் பாலில் உள்ள கொழுப்புச் சத்து அதிகரிக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories