மண்ணின் நீர் சேமிப்பு தன்மையை அதிகரிக்கும் முறை!

உழவுமுறை:

கோடை மழையை பெறும் காலத்தில் நிலத்தை சட்டிக் கலப்பையைக் கொண்டு உழவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கோடைக்காலத்தில் பெய்யும் மழை நீரானது நிலத்திலிருந்து வழிந்தோடி வீணாவது தடுக்கப்படும்.

மேலும் கோடையில் பெய்யும் மழை நீர் எளிதில் மண்ணுக்குள் சென்றடையும். இதுபோல உழவு செய்து மண்ணில் நீர் புகும் திறனை அதிகரிப்பதால் மேற்பரப்பு மண் மழை நீரால் அடித்து செல்லப்படுவது தடுக்கப்படுவதுடன் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.

பொதுவாக கோடையில் உழவு செய்யும் போது நிலப்பரப்பை சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும் அவ்வாறு செய்வதால் நீர் மற்றும் காற்றினால் மண்ணில் ஏற்படும் அரிமானம் தடுக்கப்படுகிறது. மேலும் மண்ணின் நீர் சேமிப்பு திறன் அதிகரிக்கப்பட்டு மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது.

இறுக்கம் தளர்த்தல்:

மழை பெய்யும் போது மண்ணின் மேற்பரப்பு மணி அடித்து செல்லப்படுவது மண்ணில் மேல் மண் மற்றும் அடி மண் இறுக்கம் ஏற்படுகிறது.

பொதுவாக இப்பிரச்சனை செம்மண் நிலத்தில் அதிகமாக தென்படும் இந்த வகை மற்றும் இறுக்கத்தை தளர்த்த 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உளிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

கலப்பையை கொண்டு 40 சென்டி மீட்டர் ஆழத்துக்கு மண்ணைத் உழவு செய்யலாம். இவ்வாறு செய்வதால் மண் இறுக்கமும் தளர்த்தப்பட்டு மண்ணின் நீர் சேமிப்பு தன்மை அதிகரிக்கப்படுகிறது.

இயற்கை உரங்கள் மற்றும் பசுந்தாள் உரமிடுதல்:

ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் நங்கு மக்கிய தொழு உரம் அல்லது பயிர் கழிவுமக்கு உரம் அல்லது தென்னை நார்க்கழிவு உரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மண்ணில் இட்டு உழவு செய்த பிறகு விதைப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு இயற்கை உரங்களை மண்ணில் இடுவதால் மண்ணின் நீர் சேமிப்பு திறன் அதிகரிக்கப்படுகிறது.

பசுந்தாள் உரப் பயிர்களான சனப்பை, தக்கை பூண்டு, சீமை அகத்தி, தட்டைப்பயிறு ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை விதைத்து, பூக்கும் தருணத்தில் அவற்றை மண்ணில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்வதால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர் போகும் திறனை அதிகரிக்கலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories